என தாய்க்கு கருணை காட்டுங்கள்.. குடியரசு தலைவருக்கு சப்னத்தின் மகன் வேண்டுகோள்

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சப்னம், 7 பேரை கொலை செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் அனைவரையும் தனது காதலன் சலிமுடன் சேர்ந்து, பாலில் விஷம் கலந்து கொடுத்து பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 10 மாத குழந்தையையும் விட்டு வைக்காமல் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர் விசாரணையில் அவர்கள் கொலை செய்தது உறுதியானதால் சப்னம் மற்றும் சலீம் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சப்னத்தின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது 12 வயது மகன் தனது தாய்க்காக குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளான். மேலும் சப்னம் சார்பிலும் உத்திரபிரதேச ஆளுநருக்கு மீண்டும் ஒரு கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை கொலை செய்யும் போது கர்பிணியாக இருந்த சப்னம், சிறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறையில் 6 வயதுக்கு மேல் குழந்தையுடன் இருக்க அனுமதி இல்லை என்பதால், உஷ்மான் சஃபி என்பவர் சப்னத்தின் மகனான முகமது தாஜை வளர்த்து வருகிறார். உஷ்மான் சஃபி கல்லூரியில் சப்னத்தின் ஜூனியர் ஆவார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுவன், என்னுடைய தாயார் எனக்கு தேவை என்றும், குடியரசு தலைவர் என் தாயை தூக்கிலிட விடமாட்டார் என நம்பிக்கையுடன் தெரிவித்தான்..

முகமது தாஜின் வளர்ப்பு தந்தையான உஷ்மான் சபி கூறும்போது, அவனது தாயார் தூக்கு தண்டனை பெற்றாலும், அவரின் குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *