சிப் உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்ற திட்டம்.. சிப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை..

மின்னணு பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க இந்தியாவை சிப் உற்பத்தியின் மையமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் படி இந்தியாவில் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவுடனான மோதலை அடுத்து மேக் இன் இந்தியா திட்டம் வேகமெடுத்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட்போன் உட்பட பல மின்னணு பொருட்களுக்கு தேவையான சிப்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.

இப்போது சிப் உற்பத்தியில் தைவான் முதலிடத்தில் உள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிப் தயாரிப்புகள் மட்டுமில்லாமல் CCTV கேமராக்கள் முதல் 5G தொழிற்நுட்பம் உரை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சரியான உட்கட்டமைப்பு இல்லாததால் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்தொடங்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்மார்போன் உற்பத்தி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் டாடா குழுமம் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள நெக்ஸ்ட் ஆர்பிட் வென்சர்ஸ் கூட்டமைப்பு இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *