இந்திய கடற்படைக்கு புதிதாக இரண்டு வகையான நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டம்..

இந்திய கடற்படைக்கு 24 புதிய நீர்மூழ்கி கப்பல் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் மற்றும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் என இரண்டையும் உருவாக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியா பிரட்டன் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்கா உடன் அனுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை சுற்றிலும் கடல் பரப்பு என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் தேவைப்படுகிறது.

ஆனால் இந்தியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் கப்பல் அதிகமாக தேவையில்லை என கூறப்படுகிறது. இந்தியா அணுசக்தி மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலுமே நீர்மூழ்கி கப்பல்ட் தயாரிக்க உள்ளது. இதற்கான செலவு 25,000 முதல் 30,000 கோடி வரை ஆகும் என கூறப்படுகிறது.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணுசக்தி மற்றும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் இரண்டு வகையான நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க முடிவெடுத்துள்ளது.

Also Read: சீனாவுக்கு எதிராக இந்திய இராணுவம் கே-9 வஜ்ரா ஹோவிட்சரை லடாக் எல்லையில் நிறுத்தியுள்ளது.

டீசல் நீர்மூழ்கி கப்பல்களை விட அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் செலவு இரண்டு மடங்கு ஆகும். ஆனால் டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலில் எரிபொருள் நிரப்புவதற்கு அடிக்கடி மேலே வரவேண்டும். ஆனால் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலில் ஒரு முறை நிரப்பினால் பல வருடங்களுக்கு நீருக்கு அடியிலேயே இருக்க முடியும்.

Also Read: இந்திய இராணுவத்திற்கு புதிதாக 118 அர்ஜூன் டேங்குகள்.. அனுமதி வழங்கியது பாதுகாப்பு அமைச்சகம்..

மேலும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் எழுப்பும் அதிர்வும் குறைவாக இருக்கும். இதனால் இந்த நீர்மூழ்கி கப்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான் பல நாடுகள் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலுக்கு மாறி வருகின்றன. இந்தியாவும் இரண்டு வகையான கப்பல்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO..

Leave a Reply

Your email address will not be published.