பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பில் பயிற்சி பெற இந்தியா வந்தடைந்த பிலிப்பைன்ஸ் வீரர்கள்..?

இந்தியாவில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அமைப்புகளில் பயிற்சி பெறும் ராணுவ வீரர்களின் முதல் தொகுதியை அனுப்பும் விழாவை பிலிப்பைன்ஸ் புதன்கிழமை நடத்தியது,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் தனது கடற்படைக்கு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. 374.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு துறையின் மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரென்சானா கையெழுத்திட்டார். ஆர்டர் கிடைத்த பத்து நாட்களுக்குள் கரை அடிப்படையிலான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வழங்குமாறு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்டவை. இவற்றை நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையிலிருந்து ஏவலாம். ஜனவரி 11 அன்று இந்திய கடற்படை மற்றும் DRDO இணைந்து INS விசாகப்பட்டினம் போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Also Read: வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் அல்ல: வி.கே.சிங்

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை மேக் 2.8 முதல் 3 மேக் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் பிரம்மோஸ்-II ஹைப்பர்சோனிக் க்ருஸ் ஏவுகணை தற்போது வளர்ச்சியில் உள்ளது. இது மேக் 7 வேகத்தில் 450 முதல் 600 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது.

Also Read: பெல்ஜியத்திடம் இருந்து 50 வருட பழமையான C-130 விமானத்தை வாங்க உள்ள பாகிஸ்தான்..?

தற்போது இந்தியாவிற்கு வீரர்களை அனுப்பும் விழா மணிலாவில் உள்ள பிலிப்பைன்ஸ் மரைன் தலைமையகத்தில் பிலிப்பைன்ஸ் மரைன் கார்ப்ஸ் தலைவர் மேஜர் ஜெனரல் ஹரிகோ மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதுதவிர ஆயுதங்களை கண்டறியும் ரேடார்களுக்காக ஆர்மினிய அரசாங்கம் DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read: இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 5 ஆண்டுக்குள் தயாராகிவிடும்: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்

Leave a Reply

Your email address will not be published.