சாலமன் தீவில் சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்.. சைனா டவுன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
பசுபிக் குட்டி நாடான சாலமன் தீவில் சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. சாலமன் தீவின் அரசாங்கம் தைவானை விடுத்து சீனாவை ஆதரித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தற்போது சாலமன் தீவில் மனாசே சோகவாரே பிரதமராக உள்ளார். தைவானை உலக அளவில் எந்த நாடுகளும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. தைவானை நாடாக அங்கீகரித்த 16 நாடுகளில் சாலமன் தீவும் ஒன்று. 2019 ஆம் ஆண்டு சாலமன் தீவு தைவானிடம் இருந்து விலகி சீனாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் தைவானை நாடு என அங்கீகரித்ததை பின்வாங்கினர்.
இதற்கு சீனா தான் காரணம் என தைவான் குற்றம் சாட்டியது. சாலமன் பிரதமருக்கு சீனா லஞ்சம் கொடுத்ததாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் சாலமன் தீவீல் ஆறு பெரிய தீவுகளும் 900 மேற்பட்ட சிறிய தீவுகளும் உள்ளன. சாலமன் தீவின் தலைநகர் ஹோனியாரா. இந்த தீவின் மொத்த மக்கள் தொகை 7,10,000 ஆகும்.
இந்த தீவு ஆஸ்திரேவியாவில் இருந்து 1,000 கிலோ மீட்டர் தூரத்திலும், அமெரிக்காவின் குவாம் தீவில் இருந்து 3,075 கிலோமீட்டர் தூரத்திலும், பப்பூவா நியூ கினியாவில் இருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த சாலமன் தீவில் அதிக மக்கள் தொகை கொண்ட மகாணம் மலாய்டா தீவு ஆகும்.
ஆனால் மலாய்டா தீவிற்கு பிரதமர் மனாசே எதுவுமே செய்யவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக மலாய்டா தீவு உள்ளது. இதனால் மலாய்டா தீவிற்கும் பிரமருக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் பிரதமர் சீனாவை ஆதரித்ததால் மோதல் இன்னும் அதிகமாயிற்று.
ஏனென்றால் சீனா அங்கு சைனா டவுன் என்ற பகுதியை உருவாங்கி அங்கு பல வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறது. இதனால் சாலமன் தீவு மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது. இதனால் மலாய்டா மக்கள் தலைநகர் ஹோனியாராவை நோக்கி படையெடுத்தனர். சீனர்களை வெளியேற்றகோரியும், சீனாவிடம் லஞ்சம் வாங்கியது பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Also Read: பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாலிபான் தாக்குதல். இரண்டு வீரர்கள் பலி..
ஆனால் பிரதமர் அதுபற்றி எதுவும் கூறாததால் கடந்த புதன்கிழமை வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டது. மேலும் சைனா டவுனில் உள்ள சீன கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வியாழன் கிழமையும் வன்முறையால் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பிரதமர் கேட்டுகொண்டதன் பேரில் ஆஸ்திரேலியா மற்றும் பப்பூவா நியூ கினியாவில் இருந்து தலா 50 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
Also Read: நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..
பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தண்ணீர் மற்றும் ரப்பர் குண்டுகள் கொண்டு போலிசார் விரட்டி அடித்தனர். இருப்பினும் அங்கு இன்னும் போராட்டம் நடந்து கொண்டுதான் வருகிறது. சீனா இரண்டு காரணங்களுக்காக சாலமன் தீவுகளை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. ஒன்று தைவானை நாடாக அங்கீகரிக்க கூடாது என்பதற்காக, இரண்டாவது சாலமன் தீவு ஆர்டிக் நடுபகுதியில் அமைந்துள்ளதால் நாளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் போர் ஏற்பட்டால் சாலமன் தீவு முக்கியமானதாக இருக்கும். அங்கு இருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த முடியும் என நம்புவதால் அங்கு அதிக அளவில் முதலீடு செய்து சீன மக்களை குடி அமர்த்தி உள்ளது.
Also Read: சீன கடற்பரப்பில் திடீரென மறையும் சீன கப்பல்.. அச்சத்தில் உலக நாடுகள்..