பாகிஸ்தானுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம் நடத்திய் பலுசிஸ்தான் மக்கள்..

பாகிஸ்தான் இராணுவத்தால் பலுச் மக்கள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் போவதற்கு எதிராக ஜெர்மனியில் பலுச் தேசிய இயக்கம் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த போராட்டம் அக்டோபர் 8 அன்று ஜெர்மனியில் நடைபெற்றது.

பலுச் தேசிய இயக்கம் ஜெர்மனி பிரிவின் தலைவர் அஸ்கர் அலி கூறுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களாக பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போலிஸ் ஆகியவை ஆயிரக்கணக்கான பலுச் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களை கடத்தி சென்றுள்ளனர்.

பாகிஸ்தானால் நாங்கள் பல துன்பங்களை எதிர்கொள்கிறோம். காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தங்களின் குடும்பத்தினரை விடுவிக்ககோரி போராடுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான இராணுவம் போராடும் உரிமையை கூட பறித்துவிட்டனர் என கூறியுள்ளார்.

சமீபத்தில் கடத்தப்பட்ட பஹீம் பலுச் உட்பட கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிக்ககோரி பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். காணாமல் போனவர்களின் புகைப்படங்கள், இடங்கள் மற்றும் தேதிகளை போராட்டகாரர்கள் கையில் ஏந்தி இருந்தனர்.

தகவலின்படி, கடத்தப்பட்ட பல பலுச் மக்கள் போலி என்கவுண்டர்களில் கொல்லப்படுகின்றனர். அவர்களின் சிதைந்த உடல்கள் தொலைதூரத்தில் கண்டுபிடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஜூலை மாதம் பாகிஸ்தான் இராணுவத்தினர் 10 மாணவர்கள் உட்பட 45 பேரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் 15 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 35 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. பலுசிஸ்தானின் மனித உரிமைகள் கவுன்சில் 48 கொலை வழக்குகளை பதிவு செய்துள்ளன. இதில் 5 பெண்கள் உட்பட 14 உடல்கள் அடையாளம் காணப்படடிவில்லை. கடந்த மாதங்களை விட ஜூலை மாதம் கொலைகள் அதிகமாக நடைபெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.