இன்றைக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.. பாகிஸ்தானுக்கு கெடு விதித்த UAE..

பாகிஸ்தான் துருக்கி உடன் நெருக்கம் காட்டும் நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கி இருந்த 15,750 கோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திருப்பி கேட்டுள்ளது. மேலும் இன்றைக்குள் வழங்க வேண்டும் என கெடு விதித்துள்ளது.

தீவிரவாததை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் தனி இஸ்லாமிய கூட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கும் துருக்கி உடன் நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராகவும் பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருந்தது.

இதனால் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து UAE பாகிஸ்தானுக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளாதால் பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.

ஏற்கனவே அகலபாதாளத்தில் இருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தினால் யாரும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முன்வருவதில்லை. கொரோனா தொற்றின் போது பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதத்தில் இருந்து -1.5 சதவீதமாக குறைந்து விட்டதாக உலக வங்கி கூறியுள்ளது.

பாகிஸ்தானின் நண்பனான சீனா கூட பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுத்துவிட்டது. இதனால் ஐக்கிய அரசு எமிரேட்சின் இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை தொடர்பு கொள்ள பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆனால் UAE சார்பில் எந்த பதிலும் வரவில்லை. கடனை திருப்பி செலுத்த இன்றே கடைசிநாள் என்பதால் பதற்றத்தில் உள்ளது பாகிஸ்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *