பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியானது உண்மைதான்! முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

பாலக்கோட்டில் 2019ல் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனை பாகிஸ்தான் முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் CRPF வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தின. இதில் 300 தீவிரவாதிகளுக்கு மேல் இறந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதனை மறுத்து வந்தது.

இந்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை, வெறும் மணல் பகுதியில் தான் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அரசு கூறிவந்தது. இதனையே இந்தியாவில் உள்ள சில எதிர்க்கட்சி தலைவர்களும் கூறிவந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் துாதரக அதிகாரி ஆஹா ஹிலாலி(Aga Hilali) பாகிஸ்தானின் தனியார் டிவி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உண்மைதான். யாரும் பலியாகவில்லை என நாங்கள் அப்போது கூறியது பொய் எனவும், எல்லையில் நிலைமை மோசமாகி விடக் கூடாது என்பதற்காகவே பொய் கூறியதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி கூறினார்.

மேலும் 1971 க்கு பின்பு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலின் போது தான் இருநாட்டு போர் விமானங்களும் எல்லை காட்டுப்பாட்டு கோட்டை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *