சாம்சங் மொபைலின் QR கோடு அல்லாவை அவமதித்தாக கூறி சூறையாடிய பாகிஸ்தானியர்கள்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சாம்சங் நிறுவனத்தின் விளம்பர பலகையில் இருந்து QR குறியீட்டை நிந்தனை என கூறி இது அல்லாஹ்வை அவமதிப்பதாக குற்றம் சாட்டி சாம்சங் நிறுவன கடைகளை சூறையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று பாகிஸ்தானின் கராச்சி நகரில், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) அடிப்படைவாதிகள் சாம்சங் கடைகளை குறிவைத்து அதனை சூறையாடி தீ வைத்து எரித்தனர். சாம்சங் நிறுவனத்தின் விளம்பர பலகையில் இருந்த QR குறியீட்டை கண்டு பரேல்வி முஸ்லிம்கள் கோபமடைந்தனர்.

இந்த அடிப்படைவாத குழு QR குறியீட்டை ‘நிந்தனை’ என குறிப்பிட்டது மற்றும் இது அல்லாஹ்வை அவமதிப்பதாக குற்றம் சாட்டியது. இது அல்லாஹ்வுக்கு எதிரானது என கூறியதால் சாம்சங் விளம்பர பலகை சூறையாடப்பட்டது. மேலும் சாம்சங் மொபைல் ஊழியர் ஒருவர் தனது வைஃபை நெட்வொர்க்கிற்கு நிந்தனை என்ற பெயரை கொடுத்தால் நிந்தனை செய்யப்பட்டது என புதிய வதந்தி பரவ ஆரம்பித்தது.

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி 7UP பாட்டில்களில் முகம்மது நபியின் பெயருடன் QR குறியீட்டை அச்சடித்ததற்காக அமெரிக்காவில் உள்ள அந்த நிறுவனத்தை மிரட்டியுள்ளார். நிறுவனம் QR குறியீட்டை அகற்றவில்லை என்றால் டிரக்கை எரித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர் அவர் பாகிஸ்தான் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் இந்த வருடம் பிப்ரவரியில், குரானின் பிரதிகளை கிழித்ததாக கூறி மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். மேலும் கடந்த ஆண்டு குரான் வாசகத்துடன் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரை கிழித்ததாக இலங்கையை சேர்ந்த நபர் அடித்து உயிருடன் எரிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.