பாகிஸ்தானியர்கள் நமது எதிரி அல்ல.. புனேவில் நடந்த ஈத் மிலன் நிகழ்ச்சியில் சரத் பவார் பேச்சு..
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று பாகிஸ்தானில் உள்ள சாமானியர்கள் இந்தியாவின் எதிரி அல்ல, ஆனால் இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்கள் தான் இந்தியாவின் எதிரிகள் என கூறியுள்ளார்.
புனேவின் கோந்தவா பகுதியில் நடைபெற்ற ஈத்-மிலன் நிகழ்ச்சியில் பேசிய சரத் பவார், பாகிஸ்தானில் உள்ள சாமானியர்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல, ஆனால் இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்கள் தான் எதிரிகள் என கூறினார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி ராணுவத்தின் உதவியுடன் அதிகாரம் பெற நினைப்பவர்கள் தான் உண்மையான எதிரிகள் என தெரிவித்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பெயரை குறிப்பிடாமல், அண்டை நாடான பாகிஸ்தானில் உங்களுக்கும் எனக்கும் சகோதரர்கள் உள்ளனர். ஒரு இளைஞன் பாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றி அந்த நாட்டிற்கு வழிகாட்ட முயன்றான், ஆனால் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டான் என இம்ரான்கானை மறைமுகமாக குறிப்பிட்டார்.
Also Read: சத்தீஸ்கரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழப்பு..?
பின்னர் மத்திய அமைச்சராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் பலமுறை பாகிஸ்தானுக்கு சென்றதை நினைவு கூர்ந்த பவார், லாகூர் மற்றும் கராச்சி என நாம் எங்கு சென்றாலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறினார். ஒரு போட்டிக்காக கராச்சி சென்றிருந்த போது, போட்டி முடிந்த உடன் நாங்கள் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தோம்.
காலை உணவை சாப்பிட்டு விட்டு பில் செலுத்த முயன்றபோது, உணவக உரிமையாளர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். நாங்கள் அவர்களின் விருந்தினர்கள் என கூறினார் என பவார் தெரிவித்தார். மேலும் தனது உரையில் ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்து பவார் பேசினார்.
Also Read: உ.பியில் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சொந்த வீட்டையே இடித்து தள்ளிய ஆலம் சித்திக்..
இன்று உலகில் வேறுவிதமான சூழ்நிலை நிலவுகிறது. ரஷ்யா போன்ற சக்தி வாய்ந்த நாடு உக்ரைன் போன்ற சிறிய நாட்டை தாக்குகிறது. இலங்கையில் இளைஞர்கள் சாலையில் சண்டையிடுகிறார்கள், அந்த நாட்டின் தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.