பணியின் போது மதமாற்றத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர், விசாரணைக்கு உத்தரவிட்டது காங்கோ அரசு
காங்கோவில் பணியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த கர்னல் ஒருவர் ஐக்கிய நாடுகளின் பணியாளர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காங்கோவில் பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஐ.நா. ஊழியர்களை இஸ்லாமிற்கு மதம் மாற்றுவதை கண்டறிந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாம் மத்திய ஆபிரிக்க நாட்டில் ஒரு சிறுபான்மை மதம் ஆகும். பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஒரு சில கிறிஸ்தவ ஐ.நா. ஊழியர்களை அணுகி இஸ்லாமிற்கு மாறும்படி கேட்டுள்ளார்.
ஐபிடியின் அறிக்கையின்படி, கர்னல் சாகிப் முஷ்டாக்கி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு உறுதிப்படுத்தல் பணியின்(MONUSCO) ஒரு துணைத் தளபதி ஆவார்.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, பொது தலைமையகம் (GHQ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தி க்ரோனிகல்ஸ் படி, 1999 இல் ஐ.நா. பணி வந்ததிலிருந்து, பாகிஸ்தான் அதிகாரிகள் கிழக்கு காங்கோவில் தங்கள் இஸ்லாத்தின் முத்திரையை தீவிரமாக ஊக்குவித்துள்ளனர்.
லி சோயர் செய்திநாளிதலின் படி, பாகிஸ்தானிய படைப்பிரிவினர் வடக்கு கிவு(North kivu) மற்றும் இடூரி (Ituri) பிராந்தியங்களில் பல மசூதிகளை கட்டியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2012 ஆம் ஆண்டில், ஹைட்டியில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் ஹைட்டியில் உள்ள ஒரு பாகிஸ்தான் இராணுவ தீர்ப்பாயம் அவர்களை இராணுவத்திலிருந்து நீக்கி இருவருக்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் மீது அவரது மனைவி வன்முறை குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்து வைக்கப்பட்டதாகவும், அக்ரமின் இராஜதந்திர நடவடிக்கை காரணமாக எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.