ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சீன நாணயத்தில் வர்த்தகம் செய்யும் பாகிஸ்தான்..?
பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் சீன நாணயத்தில் வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான RMB மூலதன சுழற்சி முறையை அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரென்மின்பி (RMB) என்பது சீனாவின் அதிகாரப்பூர்மான நாணயம் மற்றும் உலகின் இருப்பு நாணயங்களில் ஒன்றாகும். மேலும் ரென்மின்பி உலகின் எட்டாவது அதிகம் வர்த்தகம் செய்யப்பட்ட நாணயமாகவும் உள்ளது. சீனாவின் இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சகம் மற்றும் மத்திய வங்கியை பாகிஸ்தான் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சீன நாணயத்தில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக “RMB விலை நிர்ணயம்” என்ற ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுத்ததாக RMB தீர்வு மற்றும் நிதி கொள்கைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இதற்காக வங்கிகளும் அமைக்கப்பட உள்ளன. கடந்த வாரம் புதன்கிழமை டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு 2.5 ரூபாய் சரிந்து 200 ரூபாய்க்கு மேல் சென்றது. மே 10 அன்று டாலருக்கு எதிராக 188.66 ரூபாயாகவும். மே 11 அன்று 190.02 ரூபாயாகவும். மே 12 அன்று 191 ரூபாய்க்கு மேலாகவும் சரிந்தது.
Also Read: 10 மாதங்களில் 14 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்.. உலக வங்கி அறிக்கை..
மே 13 அன்று 192.52 ரூபாயாகவும். மே 16 அன்று 194 ரூபாயாகவும். மே 17 அன்று 195.74 ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு 203 ரூபாயாக உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, தண்ணீர் நெருக்கடி, கோதுமை நெருக்கடி, பயங்கரவாதம் போன்றவற்றால் பாதித்துள்ள நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நாட்டை திவால் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு.. முதல் 10 இடத்திற்குள் இந்தியா..