நிதி நெருக்கடியால் வீடுகள் மற்றும் தொழிற்துறைக்கான மின்சாரத்தை நிறுத்தவுள்ள பாகிஸ்தான்..?

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடியாத நிலையில் உள்ளதால் வீடுகள் மற்றும் தொழிற்துறைகளுக்கான மின்சாரத்தை நிறுத்த உள்ளது.

கடந்த மாதம் முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் நடைபெற்று வருவதால் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே நிதி இல்லாமால் போராடும் பாகிஸ்தான் எரிபொருளை வாங்க அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.

பாகிஸ்தானின் எரிசக்தி செலவுகள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த 9 மாதங்களில் இரண்டு மடங்காக அதிகரித்து 15 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சுமார் 3,500 மெகாவாட் மதிப்புள்ள மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

Also Read: ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

இதனை புதிய நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. எரிசக்தி இறக்குமதியை சார்ந்து இருக்கும் பாகிஸ்தான் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read: இலங்கையை தொடர்ந்து நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடி.. எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு..

பாகிஸ்தானின் நிலைமை அடுத்த காலக்கட்டத்தில் மாறுவதற்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் குவைத் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் சமியுல்லா தாரிக் கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில். நேபாளமும் எரிபொருளை சேமிக்க இரண்டு நாட்கள் விடுமுறை விட ஆலோசித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.