இந்தியாவின் ரபேல் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10C போர் விமானத்தை வாங்கும் பாகிஸ்தான்..?

இந்தியா ரபேல் விமானங்களை வாங்கியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து 25 சீன மல்டிரோல் J-10C போர் விமானங்களின் முழு படையையும் வாங்கியுள்ளதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமது புதன்கிழமை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று பாகிஸ்தான் தின விழாவில் 25 J-10C அடங்கிய விமானப்படை கலந்து கொள்ளும் என ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் கூறினார் உள்துறை அமைச்சர். J-10C போர் விமானம் ‘இந்தியாவின் ரபேல் விமானங்களுக்கு பதில்’ என குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் முதல்முறையாக விஐபி விருந்தினர்கள் மார்ச் 23 அன்று பாகிஸ்தான் தின விழாவில் கலந்து கொள்கிறார்கள். அப்போது J-10C போர் விமானத்தின் ஃபிளை-பாஸ்ட் விழா நடைபெறும் என அமைச்சர் கூறினார். இருப்பினும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமது J-10C விமானத்தின் பெயரை குறிப்பிடும் போது ஒவ்வொரு முறையும் தவறாக குறிப்பிட்டார்.

அவர் J-10C என்பதற்கு பதிலாக JS-10 என குறிப்பிட்டார். இந்தியாவின் ரபேல் விமானங்களிக்கு மாற்றாக பாகிஸ்தான் சீனாவின் JS-10 (J-10C) விமானங்களை வாங்க உள்ளதாக பேச்சு அடிப்பட்ட நிலையில் தற்பொது பாகிஸ்தான் அமைச்சர் அதனை உறுதிபடுத்தி உள்ளார்.

சீனா தனது J-7E போர் விமானதிற்கு மாற்றாக J-10C போர் விமானத்தை தயாரித்தது. இருப்பினும் கண்காணிப்புக்கு அது J-20 போர் விமானத்தையே நம்பி இருந்தது. ரபேலுடன் ஒப்பிடும் போது J-10C அதன் அருகில் கூட நெருங்க முடியாது. ரபேல் மல்டிரோல் போர் விமானம் வான் மேலாதிக்கம், தாக்குதல், வான்வழி உளவு, தரை ஆதரவு, கப்பல் எதிர்ப்பு தாக்குதல் மற்றும் அணு ஆயுத தடுப்பு போன்றவற்றில் ஈடுபடக்கூடியது.

Also Read: இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆரம்ப நிதியை வெளியிட்டது பிலிப்பைன்ஸ்..

ரபேலில் AESA ரேடார், IRST சென்சார் போன்ற மேம்பட்ட தொழிற்நுட்பங்கள் கொண்ட 4.5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். மேலும் ரபேலின் எலக்ட்ரானிக் வார்ஃபேர் தொகுப்பு அதன் வகுப்பில் மிகவும் திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது. J-10C போர் விமானம் சமீபத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டு விமான போர் பயிற்சியின் போது காணப்பட்டது.

Also Read: இந்திய இராணுவத்திற்கு குளிர்கால ஆடை.. தயாரிப்பு தொழிற்நுட்பத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கிய DRDO..

சீனாவின் J-10C போர் விமானங்களை வாங்கும் இம்ரான்கானின் செயல்பாடுகள் எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட நிலையில் டாக்டர் அஃப்னான் உல்லா கான் டிவிட்டரில், J-10C ரபேலை போல சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. இந்த பணத்தை ப்ராஜெக்ட் அஸ்ம் மற்றும் JF-17 திறன்களை மேம்படுத்துவதில் செலவிடலாம் என தெரிவித்துள்ளார்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

Leave a Reply

Your email address will not be published.