தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதரவு..?

தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது.

சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்ளிக் ஜமாத் அமைப்பை சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறி இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுதி அரேபியா தடை விதித்தது. தப்ளிக் ஜமாத்தை பயங்கரவாதத்தின் நுழைவு வாயில் என குறிப்பிட்ட சவுதி அரேபியா, தனது மண்ணில் தப்ளிக் ஜமாத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானின் கட்சியான PTI பெரும்பான்மையாக உள்ள பஞ்சாப் சட்டசபையில் தப்ளிக் ஜமாத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தப்ளிக் ஜமாத் நன்மைக்கான சக்தி என்றும், அரசியல் சாராத அமைதியான அமைப்பு என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பஞ்சாப் மகாணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தப்ளிக் ஜமாத் ஒரு உலகளாவிய அமைப்பு, இந்த அமைப்புக்கும் பயங்கரவாதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது இல்லை என்பது வரலாறு. உலகம் முழுவதும் இஸ்லாம் போதனைகள் மூலம் பாகிஸ்தானுக்கு நன்மதிப்பை பெற்று தருவதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: அர்ஜென்டினா உடனான JF-17 ஒப்பந்தத்தை இழக்க நேரிடும். இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் ட்வீட்..

தப்ளிக் ஜமாத்தை தற்போது ஆதரித்தாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே பஞ்சாப் சட்டசபை தப்ளிக் ஜமாத் அமைப்பை பல்கலைகழகங்களில் இருந்து தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. தப்ளிக் ஜமாத் பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுதாபம் காட்டுவதாகவும், மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டி அனைத்து பல்கலைகழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள மசூதிகளில் இருந்தும் தடை செய்தது. 2010 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள ஒரு மசூதியில் 94 அஹ்மதியா முஸ்லிம்கள் சிறைகைதிகளாக பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..

பஞ்சாப் மகாண சட்ட அமைச்சர் இந்த தாக்குதல் தப்ளிக் ஜமாத் அமைப்பின் உதவியால் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தப்ளிக் ஜமாத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2023 ஆம் ஆண்டு தேர்தல் வர உள்ளதால் இம்ரான்கான் தனது வாக்கு வங்கியில் கவனம் செலுத்தி வருகிறார். ஹர்கத்-உல்-முஜாஹிதீன், தெக்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு போன்ற அமைப்புகளோடு போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

Also Read: பணத்திற்காகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்றோம். பொது நலனுக்காக அல்ல: இம்ரான்கான்

Leave a Reply

Your email address will not be published.