ஜம்முவின் செனாப் ஆற்றில் நீர்மின்நிலைய கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு..

பாகிஸ்தான் உடனான தண்ணீர் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்ணீர் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்த மாத இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை பற்றி இந்தியா இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றில் கட்டப்பட்டு வரும் 540 மெகாவாட் குவார் நீர்மின்சார திட்டத்தின் பொறியியல் வடிவமைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது- 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, கட்டுமானத்தை தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்டுமானத்தின் வடிவமைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

நீர் பங்கீடு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் இஸ்லாமாபாத்தில் இருநாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் டெல்லியில் நீர் பங்கீடு கூட்டம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை கூட்டம் தொடர்பாக இந்தியா எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள செனாப் ஆற்றில் 540 மெகாவாட் குவார் நீர்மின்சார திட்டத்திற்கு 4,526 கோடி முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு ஏப்ரல் 25 அன்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அதிருப்தி தெரிவித்தார்.

Also Read: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்..? உளவுத்துறை எச்சரிக்கை..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரஉள்ள நான்கு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதில் 1,000 மெகாவாட் பகல் துல் நீர்மின் திட்டம் மற்றும் 624 மெகாவாட் கிரு நீர்மின் திட்டம் ஆகியவை அடங்கும். 1960 சிந்து நீர் ஒப்பந்தத்தின் படி சிந்து படுகையில் உள்ள ஆற்று நீரை இந்தியா வழியாக பாகிஸ்தான் பகிர்ந்து கொள்கின்றன.

இவற்றில் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமையும், மேற்கு நதிகளான செனாப், ஜீலம் மற்றும் சிந்து மீது பாகிஸ்தான் உரிமையும் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தியா வழியாக பாய்வதால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் நதிகளின் நீர் ஓட்டத்தை இந்தியா கட்டுப்படுத்த முடியும்.

Also Read: காஷ்மீரின் குல்காமில் LeT அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..

இந்த நிலையில் தான் இந்தியா செனாப் ஆற்றில் இந்தியா 540 மெகாவாட் குவார் நீர்மின் திட்டத்தை கட்டி வருகிறது. இந்தியாவின் இந்த நீர் மின் திட்டங்களால் பாகிஸ்தானின் ஆறுகளில் நீர வரத்து குறையும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் சிந்து நதி ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Also Read: டீஸ்டா நதி திட்டதிற்காக சீனாவிடம் 1B டாலர் கடன் கேட்கும் பங்களாதேஷ்..?

Leave a Reply

Your email address will not be published.