சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தான்.. ஐக்கிய அமீரகத்தையும் சாம்பல் பட்டியலில் வைத்த FATF..

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் தக்கவைத்துள்ளது. மேலும் பணமோசடி தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை FATF, சாம்பல் நிற பட்டியலில் சேர்த்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பணமோசடியை கண்காணிக்க தவறியதாகவும், இதனால் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்க வழிவகுத்ததாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தற்காக FATF பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் இணைத்தது.

மேலும் 2019 அக்டோபர் மாததிற்குள் நிதிமோசடியை தடுத்தல், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துத்ல், பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்குதல், பணமோசடி உள்ளிட்ட 27 செயல் திட்டத்தை முடிக்க வேண்டும் என FATF கூறியது.

ஆனால் பாகிஸ்தான் 26 செயல் திட்டத்தை மட்டுமே முடித்ததால் தொடர்ந்து சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. எஞ்சி உள்ளவற்றை விரைவில் முடிக்க FATF பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது. 39 உறுப்பினர்கள் கொண்ட FATF குழுவில் சீனா, மலேசியா மற்றும் துருக்கியின் ஆதரவினால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இருந்து தப்பியுள்ளது.

அதேபோல் சட்டவிரோத பணப்பதுக்கல் இடமாக UAE உள்ளதாக FATF கூறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவான இந்த பணமோசடியை தடுக்க தவறியதாக FATF ஐக்கிய அமீரகத்தை சாம்பல் பட்டியலில் இணைத்துள்ளது. ஐக்கிய அரபு அமிரகத்தில் பணக்கடத்தல் அதிகமாக நடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரி அன்வர் கர்காஷ் கூறுகையில், நிதி குற்றங்களை எதிர்த்து போராடுவதில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத நிதி நெட்வொர்க்குகளை அடையாளம் காணவும், அவர்களை தண்டிக்கவும் ஐக்கிய அமீரகம் முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.