இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி..?

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா சோதனை செய்த பிரம்மோஸ் ஏவுகணை தற்செயலாக தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நேற்று சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிந்தது.

பாகிஸ்தானின் சிந்து மகாணத்தில் உள்ள ஜாம்ஷோரோவின் அலியாபாத்திவ் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் வானில் இருந்து விழுவதை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் செய்தி சேனல்கள் வானில் இருந்து தெரியாத பொருள் விழுந்து நொறுங்கியதாகவும், வெடி சத்தம் ஏதும் இல்லை எனவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அது என்ன மாதிரியான பொருள் என தெரியவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இந்திய விமானத்தை கடத்திய மற்றொரு பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..?

சில நாட்களுக்கு முன்பு இந்தியா தவறுதலாக ஏவிய ஏவுகணைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை செய்த போது அது தோல்வியில் முடிந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ஜாம்ஷோரோவுக்கு அருகில் ஏவுகணை சோதணை வரம்பு உள்ளது.

எனவே பாகிஸ்தான் விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்த போது, ஏவுகணை தோல்வியில் முடிந்து கீழே விழுந்ததாக பாகிஸ்தானின் கான்ஃப்ளிக்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகையில், அலியாபாத், ஜாம்ஷோரோ, சிந்து சமூகவலைதலங்களில் வெளியிட்ட வீடியோவை பொறுத்தவரை, இந்த நகரத்தின் அருகே ஏவுகணை சோதணை வரம்பு உள்ளதால் இது ஏவுகணை சோதனை தான் என கூறுகின்றனர்.

Also Read: 800 கிலோமிட்டர் இலக்கை தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை..?

மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சோதனை பகுதிகளில் எதுவும் பறக்க கூடாது என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் NOTAM ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க நினைத்து ஏவுகணையை சோதனை செய்திருக்கிறது. ஆனால் அந்த ஏவுகணை தோல்வியில் முடிந்ததாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் பாகிஸ்தான் தரப்பில் இது என்ன மாதிரியான சோதனை என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.