சீனாவுடன் இணைந்து உய்கூர் முஸ்லிம் இன அழிப்பில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான்.. அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..

கனடாவை தளமாக கொண்ட சிந்தனை குழுவான உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றத்தின் (IFFRAS) சமீபத்திய அறிக்கையில், சீனாவின் ஜின்ஜியாங் மகாணத்தில் உய்கூர் முஸ்லிம்களை ஒடுக்குவதில் பாகிஸதானும் இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளது.

உலகில் எங்கு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்தாலும் முதல் ஆளாக பாகிஸ்தான் கவலையோ அல்லது கண்டனமோ தெரிவிப்பது வழக்கம். குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் சீனாவின் உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து பாகிஸ்தான் இதுவரை சீனாவை கண்டித்தது இல்லை. இதற்கு சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சீனாவின் பொருளாதார எழுச்சியால் பாகிஸ்தானில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் உய்கூர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் சீனாவுக்கு ஆதரவாக உய்கூர் முஸ்லிம்களை ஒடுக்குவதில் சீனாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

உய்கூர் முஸ்லிம்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், அங்கு சென்றவர்கள், தகவல் தொடர்பு மற்றும் அவர்களுடன் உறவு வைத்துகொள்வதனால் சீனா தற்போது 25 நாடுகளுடன் சேர்த்து பாகிஸ்தானையும் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உய்கூர் முஸ்லிம்களுடன் தொடர்பில் உள்ளனர்.இதனால் சீனா பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உய்கூர் முஸ்லிம்களை ஒடுக்குவதில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் பாகிஸ்தானியர்களும் உய்கூர் முஸ்லிம்களும் போலியான திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை கண்டுபிடித்து மீண்டும் சீனாவுக்கே பாகிஸ்தான் நாடு கடத்தி வருகிறது. மேலும் உயிருக்கு பயந்து பலர் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் வழியாக துருக்கிக்கும் செல்கின்றனர். அவ்வாறு பாகிஸ்தானுக்குள் வருபவர்களையும் பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்படைத்து வருகிறது. பயங்கரவாதிகள் என சீனா சந்தேகித்த 14 உய்கூர் இஸ்லாமிய மாணவர்களை பாகிஸ்தான் இராணுவம் சீனாவுக்கு நாடு கடத்தியது.

பின்னர் அந்த 14 உய்கூர் இஸ்லாமிய மாணவர்களும் கொல்லப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு பலுசிஸ்தானில் இருந்து 5 அப்பாவி உய்கூர் முஸ்லிம்கள் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதபோல் 2014 வரை 60 க்கும் மேற்பட்ட உய்கூர் முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். முன்னதாக அக்டோபரில் 43 நாடுகள் உய்கூர் முஸ்லிம்களுக்கு, சட்டத்தின் கீழ் முழு மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் என சீனாவுக்கு அழைப்பு விடுத்தன.

இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக கூறி கொள்ளும் பாகிஸ்தானே உய்கூர் முஸ்லிம் இன அழிப்பில் உதவி செய்து வருவது உலக முஸ்லிம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.