குஜராத் அருகே மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. 10 பாகிஸ்தான் வீரர்கள் மீது FIR பதிவு..

குஜராத்தின் அரபிக்கடலில் சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை (PMSA) மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குஜராத் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மீனவர் திலிப் நது சோலங்கி கொடுத்த புகாரின் பேரில் போர்பந்தர் நவி பந்தர் போலிசார் சம்மந்தப்பட்ட 10 பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீது FIR பதிவு செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவை சேர்ந்த ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே உட்பட 7 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பாகிஸ்தான் கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் ரமேஷ் உயிரிழந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர்.

ஏழு பேரில் லேசான காயமடைந்த ஒருவர் குஜராத்தின் ஒகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களை விசாரணைக்காக பாகிஸ்தான் காவலில் வைத்துள்ளது.

இது குறித்து இந்திய தரப்பில், பாகிஸ்தான் கடலோர காவல்படையின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததையும், ஒருவர் காயமடைந்துள்ளதையும் இந்திய கடற்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த பிரச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: காலிஸ்தானுக்கு நிதி உதவி.. கனடா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பு..

மீன்பிடி கப்பலின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தினை பாகிஸ்தான் மீறி உள்ளதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் கூறுகையில், பாகிஸ்தான் கடல் பரப்பில் நுழைந்த இந்திய படகை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் எச்சரித்தனர். அவர்கள் கப்பலை நிறுத்தவில்லை. தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்தோம். அப்போது கப்பலை நிறுத்தாததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.