பாகிஸ்தான் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது 28 லட்சத்திற்கு பிரியாணி சாப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள்..

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்களுக்கு உணவுக்கான செலவு மட்டும் 28 லட்சம் ரூபாய் ரசீது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த செய்தி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாகிஸ்தானில் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடந்த போது வெடிகுண்டு வெடித்தது. இதனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மற்ற நாடுகள் தயக்கம் காட்டின. பாகிஸ்தானில் கடந்த 12 வருடமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.

பாகிஸ்தானுடன் பங்கேற்கும் நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட மற்ற நாட்டு மைதானங்களில் தான் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது.

கிரிக்கெட் போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுருத்தல் இருப்பதால் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

பாதுகாப்பு பணியில் 5 எஸ்பிக்கள், எஸ்எஸ்பிக்கள் உட்பட 500 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்களுக்கு உணவுக்கான தொகையாக 28 லட்சம் ரூபாய் வந்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..

எட்டு நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்களுக்கு தினமும் இரண்டு பிரியாணி வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எட்டு நாளைக்கு 28 லட்சத்திற்கு பிரியாணி சாப்பிட்ட செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரியாணிக்காக 28 லட்ச ரூபாய் செலவழித்தும் கடைசிவரை கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை என்பது தான் சோகம்.

Also Read: ஏவுகணை தாயாரிக்க பயன்படும் பொருட்களுடன் பாகிஸ்தான் நோக்கி சென்ற சீன கப்பல்.. மடக்கி பிடித்த இந்திய கடலோர காவல்படை..

Leave a Reply

Your email address will not be published.