இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பாகிஸ்தானே காரணம்.. பங்களாதேஷ் பிரதமரின் மகன் குற்றச்சாட்டு..

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அடுத்து பிரதமர் ஷேக் ஹசினா பங்களாதேஷில் உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் மகன் சஜீப் வசேத் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மாதம் துர்கா பூஜையின் போது 12 மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 7 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி(BNP) மற்றும் பாகிஸ்தான் ஆதரவு தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி மீது குற்றம் சாட்டினார்.

மேலும் BNP மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை “பங்களாதேஷில் உள்ள பாகிஸ்தானின் தீய பேய்” என கடுமையாக விமர்சித்தார். பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கு இந்த அமைப்புகளே காரணம் என குற்றம் சாட்டினார்.

இந்த அமைப்புகள் இஸ்லாத்தை தவறாக சித்தரித்து சகிப்பின்மையை வளர்த்து நாட்டை இருளில் தள்ளுகின்றன. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்புகிறார்கள். இது மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்குகின்றன என சஜிப் வசேத் தெரிவித்துள்ளார்.

சஜீப் வசேத் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதலத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு இளைஞர் குரானை இந்து கோவிலில் வைப்பது பதிவாகி உள்ளது. அந்த இளைஞரின் பெயர் இக்பால் ஹொசைன் என தெரியவந்துள்ளது. அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.

மேலும் சஜீப் வசேத் கூறுகையில், BNP கட்சியினர் இக்பால் ஹொசைனை காப்பாற்றவே முயற்சி செய்கிறார்கள். அவர்கள் இக்பாலை மனநிலை சரியில்லாதவன், ஊனமுற்றவன், போதைக்கு அடிமையானவன் என கூறி காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.

Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள்..

அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா? மக்கள் பக்கம் நின்று போராடும் எண்ணம் இல்லையா? எதற்கு இக்பாலை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் என சஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். CCTV காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

Also Read: இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்

நாட்டின் முதல் ஜனாதிபதியும் மற்றும் தனது தாத்தா ஷேக் முஜிபூர் ரஹ்மானும் மதசார்பற்ற பங்களாதேஷை உருவாக்கினார்கள். ஆனால் 1971 ஆம் ஆண்டு தனது தாத்தா கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இராணுவ வீரர்கள் பங்களாதேஷை இஸ்லாமிய நாடாக மாற்றினர். 1988 ஆம் ஆண்டு இஸ்லாம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. பங்களாதேஷ் மீண்டும் மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்படும் என பங்களாதேஷ் அரசின் தகவல் மற்றும் தொழிற்நுட்ப ஆலோசகரும், பிரதமர் ஷேக் ஹசினா மகனுமான சஜிப் வசேட் தெரிவித்துள்ளார்.

Also Read: பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்.. போலிசார் உட்பட 5 பேர் பலி..

Leave a Reply

Your email address will not be published.