இந்திய கப்பலை மூழ்கடித்த தினத்தில் கப்பல் கட்டுமானத்தை ஆரம்பித்த பாகிஸ்தான்..

பாகிஸ்தானுக்கு சீனா உதவியுடன் அதிநவீன எட்டு நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட உள்ளன. அவற்றில் நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிலும், நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் பாகிஸ்தானிலும் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டன. இந்த நிலையில் ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல் கட்டும் நிகழ்வு டிசம்பர் 9 அன்று தொடங்கப்பட்டது.

கராய்ச்சி கப்பல் கட்டும் தளத்தில் பாகிஸ்தான் ஹாங்கோர் வகுப்பு வழிகாட்டி ஏவுகணை தாக்குதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. இது டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.
இந்த ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பலுக்கு PNS TASNIM என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பெயர்களும் ஏன் வைக்கப்பட்டது. டிசம்பர் 9 அன்று ஏன் பாகிஸ்தான் கட்டுமானத்தை ஆரம்பித்தது என தற்போது தெரியவந்துள்ளது. அதாவது 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது.

ஆனால் அந்த போரில் பாகிஸ்தானின் பிரெஞ்சு டீசல் நீர்மூழ்கி கப்பலான PNS ஹாங்கோர், இந்தியாவின் போர்கப்பலான INS குக்ரியை டிசம்பர் 9 அன்று தாக்கி மூழ்கடித்தது. அப்போது பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலை இயக்கிய தளபதியின் பெயர் அஹ்மத் தஷ்னிம். இந்த பெயரை தான் தற்போது ஹாங்கோர் வகை PNS தஷ்னிம் நீர்மூழ்கி கப்பல் என பாகிஸ்கான் பெயரிட்டுள்ளது.

Also Read: அட்லாண்டிக் நாடான ஈக்குவோடரியல் கினியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள சீனா.. இந்தியாவுக்கு ஆபத்தா..?

இன்று வரை இந்திய வரலாற்றில் போரில் மூழ்கிய ஒரே கப்பல் INS குக்ரி மட்டும் தான். அப்போது இந்த கப்பலின் கேப்டனாக மகேந்திர நாத் முல்லா இருந்தார். நீரில் மூழ்கிய கப்பலில் 18 அதிகாரிகள் மற்றும் 176 மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் கப்பல் நீரில் மூழ்கியதால் உயிரிழந்தனர். இதுவரை இந்திய வரலாற்றில் கப்பலுடன் நீரில் மூழ்கிய ஒரே கேப்டன் மகேந்திர நாத் முல்லா மட்டுமே.

Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..

அவரது மரணத்திற்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான மகா வீர் சக்ரா வழங்கப்பட்டது. INS குக்ரியை பாகிஸ்தான் மூழ்கடித்து டிசம்பர் 9 ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் தான் டிசம்பர் 9 அன்று தனது ஹாங்கோர் PNS தஷ்னிம் நீர்மூழ்கி போர் கப்பலின் கட்டுமானத்தை பாகிஸ்தான் துவக்கியுள்ளது.

Also Read: உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..

2028 ஆம் ஆண்டிற்குள் எட்டு நீர்மூழ்கி கப்பலும் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வூசாங் ஷிப்பில்டிங் என்ற சீன நிறுவனம் இந்த எட்டு நீர்மூழ்கிகப்பலையும் பாகிஸ்தானுக்கு கட்டிகொடுக்கிறது. ஏற்கனவே வூகானில் நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ள நிலையில் ஐந்தாவது கப்பல் டிசம்பர் 9 வியாழன் அன்று தொடங்கப்பட்டது. என்னதான் அதிநவீன கப்பலாக இருந்தாலும் அது சீன கட்டுமானம் என்பதால் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது உலகறிந்த விஷயம்..

Leave a Reply

Your email address will not be published.