பாகிஸ்தான் மற்றும் பாக். இராணுவத்திற்கு எதிராக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்..!

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பழங்குடி மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய் தாக்குதலை கண்டித்து நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் தேசிய அவாமி கட்சியின் ஆசாத் நவாஸ் மற்றும் அபித் ஷாஹீன் போன்ற அரசியல் தலைவர்கள் தலைமையில் PoK மக்கள், அஜிரா, ரவலகோட் மற்றும் பிண்டி ஆகிய இடங்களில் போராட்டங்களை நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் பொய்களையும் போலித்தனத்தையும் கூறி போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் மற்றும் இராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் மற்றும் கறுப்பு கொடிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தியபடி, அக்டோபர் 22 கருப்பு தினம் என முழக்கமிட்டனர். 1947ல் ஜம்மு காஷ்மீரில் பழங்குடி மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்திய தினமான அக்டோபர் 22 ஜம்மு காஷ்மிர் வரலாற்றில் கருப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆபரேஷன் குல்மார்க் என நடவடிக்கையின் கீழ், அக்டோபர் 22, 1947அன்று ஜம்முகாஷ்மீர் மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நேற்று ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒரு அரசியல் அமைப்பு எனவும், அதன் ஒருங்கிணைப்பு, ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் சுயாட்சி ஆகியவை தான் எங்கள் இறுதி இலக்கு எனவும் கூறப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மிர் மாநில மக்கள் தீவிரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்து அவதிபட்டு வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் பிரதேச மக்கள் ஆட்சி செய்யும் உரிமை உட்பட அடிப்படை மனித உரிமைகளை அனுபவிக்க தகுதியானவர்கள் என்பதால் இந்த கட்டாய பிரிவினை மற்றும் துன்பம் முடிவுக்கு வரவேண்டும் என ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.