இந்தியா பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் அனுமதி..?

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை பொருட்களை இந்தியா கொண்டு செல்ல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்து உள்ளனர். 50,000 மெட்ரிக் டன் கோதுமை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு வழங்க உள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் அமெரிக்க துருப்புகள் வெளியேறியதால் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் ஆட்சியில் கீழ் வந்துள்ளது. இந்த தாலிபான் ஆட்சியை எந்த நாடும் அங்கீகரிக்காததால் அவர்களுக்கு நிதி கிடைப்பது மிகப்பெரிய சிக்கல் உள்ளது. ஐநா மட்டுமே ஓரளவு அந்நாட்டு மக்களுக்கு உதவி வருகிறது.

இருப்பினும் அந்நாட்டில் வேலையின்மை, உற்பத்தியின்மை, ரூபாய் வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவு இல்லாமல் மக்கள் வாழ முடியாத இடமாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க உள்ளது.

கடந்த மாதம் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமை பொருட்களை வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தானின் AICC உயர்மட்ட கூட்டத்திற்கு பின் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க ஆப்கனுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என இம்ரான் கான் கேட்டுக்கொண்டார்.

இந்திய தரப்புடன் வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டவுடன் பாகிஸ்தான் வழியாக உதவி பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு உதவி பொருட்கள் வழங்க மட்டுமே இந்தியாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி இருவழி வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிராக போராட்டம்.. பின்னடைவில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம்..

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி கூறுகையில், ஆப்கானிஸ்தான் இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை ஏற்க தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் வழியாக உதவி பொருட்களை கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கேட்டுகொண்டார்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன்னிற்கும் மேல் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 75,000 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: சீனாவை தாக்கிய குட்டி யானை.. இந்தியா தான் காரணம் என சீனா கதறல்..

இதேபோல் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில், கோதுமை, மருந்து பொருட்கள், குளிர்கால தங்குமிடங்களுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட 5 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ரேடியோ செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.