“ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்” 140 நாடுகளை இணைக்கும் பிரதமர் மோடியின் சூரியஒளி திட்டம்..

பிரதமர் மோடியின் கனவு திட்டமான “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்” (OSOWOG) திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. வரவிருக்கும் COP26 மாநாட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த OSOWOG திட்டம் என்பது ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 140 நாடுகளின் சூரிய வளங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஒருமித்த திட்டத்தை உருவாக்குவது ஆகும். இதன் மூலம் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்த நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

இது சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோட் திட்டத்திற்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. “சூரியன் எப்போதும் மறைவதில்லை” என்பது இந்த திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாகும். உலகவங்கியின் தொழிற்நுட்ப உதவியின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

உலகெங்கிலும் சூரிய மின்சக்தியை வழங்குவதற்காக ஒரு டிரான்ஸ்-நேஷ்னல் மின்சார கட்டம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து முதன்முதலில் பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு சர்வதேச சூரிய கூட்டணியின் முதல் கூட்டத்தில் முன்வைத்தார்.

Also Read: இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.. இராணுவத்தை பயன்படுத்த முடிவு..

மேலும் சுதந்திர தின உரையிலும் மோடி சூரிய மின்சக்தி திட்டம் குறித்து பேசியுள்ளார். இதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் சூரிய மின் சக்தியை வழங்க முடியும். ஒரு கண்டத்தில் சூரிய மின் உற்பத்தி ஒரு கண்டத்தில் விநியோகம் என 2050 ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுவதுமாக செயல்பாட்டில் இருக்கும்.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கும் COP26 அல்லது ஐநா காலநிலை மாநாட்டில் இங்கிலாந்து மற்றும் இந்தியா எரிசக்தி அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்க மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Also Read: இந்தியாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தைவானுடன் பேச்சுவார்த்தை.. எச்சரிக்கும் சீனா..

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.