ஒருதலை காதல், இளைஞனை குத்தி கொலை செய்த மாணவியின் உறவினர்கள்

கரூரில் சலூன் கடை நடத்திவரும் ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன், பழைய இரும்பு வியாபாரம் செய்யும் வேலன் என்பவரின் மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரியவந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனிடையே கொரோனா விடுமுறையில் மாணவிக்கு தகுந்த அறிவுரை வழங்கி காதலை மறக்க செய்ததாக கூறப்படுகிறது.

கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள அந்த மாணவி, 2 மாதமாக ஹரிஹரனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

ஆனால் ஹரிஹரன் மாணவியிடம் தொடர்ந்து பேச முயன்றுள்ளார். இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து புதன்கிழமை அன்றி அங்குள்ள கோவிலுக்கு வருமாறு மாணவியின் தந்தை ஹரிஹரனை அழைத்துள்ளார். தனது மகளை விட்டுவிடுமாறு ஹரிஹரனிடம் சமாதானம் பேசியுள்ளார்.

தங்கள் பெண் சிறியவள், அவள் இன்னும் நிறைய படிக்க இருப்பதால் அவளை இனி தொந்தரவு செய்ய வேண்டாம் என பெண்ணின் தந்தை வேலன் ஹரிஹரனிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஹரிஹரன் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெரியப்பா சங்கர் உள்ளிட்ட உறவினர்கள் ஹரிஹரனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பலர் தடுத்தும் கேட்காத சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தி ஹரிஹரனை குத்தியுள்ளார்

நிலைகுலைந்து மயங்கி விழுந்த ஹரிஹரானை தாக்குதலில் உடன்பாடில்லாத மாணவியின் உறவினர்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவியின் உறவினர்களை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பள்ளி சென்ற தனது மகளை ஏமாற்றி அவள் காதலை மறந்த பின்னரும் அவளை தொந்தரவு செய்ததால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து கொலை தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவியின் பெரியாப்பா சங்கர், கார்த்திகேயன், வெள்ளச்சாமி ஆகியோரை கைது செய்துள்ளனர் , தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோரை போலிசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *