எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஓலா நிறுவனம்..
ஓலா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கூட்டரை இன்று முதல் விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏனென்றால் இன்று தான் உலக மின்சார வாகன தினம் ஆகும்.
ஓலா நிறுவனம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தனது ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலைதான் உலகிலேயே மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நிலையம் ஆகும்.
ஓலா நிறுவனம் இரண்டு வகையான மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ ஆகிய இரண்டு மாடல் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இவை 99,999 மற்றும் 1,29,999 ஆகிய விலைகளில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
குஜராத் அரசு அதிக மானியம் வழங்குவதால் அங்கு 20,000 குறைவாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. குஜராத்திற்கு அடுத்து டெல்லி, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைவான விலையில் கிடைக்கும். தமிழகத்தில் மானியம் கிடையாது என்பதால் முழு தொகையையும் கொடுத்து வாங்க வேண்டும்.
கடந்த மாதம் 500 ரூபாய் முன்பணமாக கொடுத்து சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வாகனத்தை பதிவு செய்து உள்ளனர். ஓலா நிறுவனம் நாடு முழுவதும் சார்ஜிங் மையத்தையும் நிறுவி வருகிறது. இந்த சார்ஜிங் மையத்தின் மூலம் 40 நிமிடங்களில் வாகனத்தை சார்ஜ் செய்து விடலாம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டர் அதிக பட்சமாக 115 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு மாத EMI ஆக 2,999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பணம் கொடுத்து பதிவு செய்தால் EMI குறைவாக இருக்கும்.
இந்த வாகனத்திற்கு வாகன கடனும் ஓலா வழங்குகிறது. IDFC, HDFC, பேங்க் ஆப் பரோடா மற்றும் டாடா கேபிடல் உடன் இணைந்து இந்த கடனை ஓலா வழங்குகிறது.