இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி: ஈராக், சவுதியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ரஷ்யா..

ஈராக் மற்றும் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உருவெடுத்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்திலும், ஈராக் மற்றும் சவுதி அரேபியா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ப்ளூம்பெர்க், கெப்ளர் மற்றும் வொர்டெக்சா ஆகியவை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் உடனான மோதல் ஆரம்பித்ததில் இருந்து ரஷ்யா பல ஐரோப்பிய இறக்குமதியாளர்களை இழந்துள்ளது. அதனை ஈடுகட்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 1 முதல் 1.2 மில்லியன் பீப்பாய்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

இது ஈராக் மற்றும் சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும் போது அதிகமாகும். இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் உக்ரைன் மோதலுக்கு பிறகு முன்னெப்போதும் இல்லாத வகையில், ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதால், ரஷ்யா ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு நாளைக்கு சராசரியாக 1.2 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வந்துள்ளதாக கெப்ளர் தரவுகள் காட்டுகின்றன. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெயில் கால் பகுதி ஆகும். அதேநேரம் ஈராகின் தினசரி விநியோகம் சுமார் 1.01 மில்லியன் பீப்பாய்கள் ஆகும். இது ரஷ்யாவை விட சிறிது குறைவு ஆகும். சவுதி அரேபியா 662,000 பீப்பாய்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

வோர்டெக்சா புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ஈராக்கிடம் இருந்து ஒரு நாளைக்கு 1.131 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றுமதியாகும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 1.16 மில்லியன் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ப்ளூம்பெர்க் தகவலின்படி, ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு 988,000 பீப்பாய்கள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஈராக்கில் இருந்து ஒரு நாளைக்கு 1.003 மில்லியன் பீப்பாய்கள் வருவதாக கூறியுள்ளது.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்த இந்தியா..?

கப்பல் கண்காணிப்பு புள்ளிவிவரங்கள் வழங்குநருக்கு வழங்குநர் மாறுபடும் வெவ்வேறு அனுமானங்கள் மற்றும் சரக்குகள் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் ஈராக் மற்றும சவுதி அரேபியா பின்னடைவை சந்தித்துள்ளன. ஈராக் மற்றும் சவுதி அரேபியா இரு நாடுகளும் ஒரு நாளைக்கு சுமார் 500,000 பீப்பாய்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Also Read: பொருளாதார நெருக்கடி: சீனாவிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்..!

கடந்த வாரம் எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், விலை உயரும் போது, உங்களுக்கு வேறு வழியில்லை என்றால், நீங்கள் எங்கிருந்தும் வாங்குவீர்கள். இந்தியாவின் நலன்கள் என்ன என்பது பற்றி எங்களுக்கு நன்கு வரையறுக்கப்பட்ட புரிதல் உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்தியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது.

Also Read: சீனாவை விட இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறிய அமெரிக்கா..!

Leave a Reply

Your email address will not be published.