நுபுர் சர்மைவை தூக்கிலிட வேண்டும்: AIMIM எம்பியும், முன்னாள் NDTV பத்திரிக்கையாளருமான இம்தியாஸ் ஜலீல்
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள AIMIM எம்பியும், முன்னாள் NDTV பத்திரிக்கையாளருமான இம்தியாஸ் ஜலீல், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும், நுபுர் சர்மாவை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத் பிரதேச ஆணையர் அலுவலகம் முன் இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இம்தியாஸ் ஜலீல், இஸ்லாம் அமைதியின் மதம், மக்கள் கோபத்தில் உள்ளனர். நுபுர் சர்மாவை தூக்கிலிட வேண்டும். நுபுர் சர்மைவை எளிதில் விடுவித்தால், இதுபோன்ற விஷயங்கள் நிற்காது.
எந்த மதத்திற்கோ, பிரிவினருக்கோ எதிராக இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும். கட்சியில் இருந்து நீக்குவது மட்டும் செயல் அல்ல. மேலும் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாக பேசியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய முஸ்லிம்கள் தெருக்களில் போராட்டம் செய்வதோடு நின்றுவிடாமல் எங்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது நுபுர் சர்மைவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கையில் உள்ளது. நுபுர் சர்மா சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்த உடனேயே அதே இரவில் அவரை கைது செய்திருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.
Also Read: நுபுர் சர்மாவின் தலை எங்காவதும், உடல் வேறு எங்காவதும்.. பகிரங்க மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பு..
அந்த டிவி சேனல் நிகழ்ச்சியை உடனே நிறுத்தியிருக்க வேண்டும், எங்கள் டிவி சேனலில் இதுபோன்ற கருத்துக்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும் என ஜலீல் கூறியுள்ளார். நிபுர் சர்மா மீதான கொலை மற்றும் தலை துண்டிப்பு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது தலைக்கு பல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் 20 லட்சம் முதல் 1 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
Also Read: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இருந்திருந்தால் நிலைமையே வேறு.. தெறிக்கவிட்ட பாப் லான்சியா