இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை..

இந்திய அரசின் தவறான கொள்கைகளால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நிகழலாம் என்ற அச்சம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் இந்துக்கள் போன்ற அறிவார்ந்த தேசத்தை பாஜக எப்படி ஆள்கிறது என்பது எனக்கு புரியவில்லை எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அல் ஜசீரா தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் பாசிச அரசு இந்தியாவுக்கும் இந்த பிராந்தியத்துக்கும் ஆபத்தானது என்றும், பாஜகவின் பாசிச கொள்கைகளால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போருக்கு வழி வகுக்கும் என கூறியுள்ளார்.

2019 பாலகோட் வான்வழி தாக்குதலின் போது பாகிஸ்தானின் பதிலடி பற்றி குறிப்பிட்ட இம்ரான்கான், இந்தியா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தினால், அதற்கு முழு பலத்துடன் மற்றும் ஆக்ரோசத்துடனும் பதிலடி கொடுக்கப்படும் என கூறினார். இரு அணுசக்தி நாடுகளும் மோதி கொள்ளும் போது அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என இம்ரான்கான் தெரிவித்தார்.

காஷ்மீர் பற்றி குறிப்பிட்ட இம்ரான்கான், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என குறிப்பிட்டு, இந்தியா அந்த பகுதியை திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தை தனது அரசு ஒவ்வொரு மன்றத்திலும் எழுப்பும் என தெரிவித்துள்ளார். மோடி அரசு இனவெறி கொண்டது என்று குறிப்பிட்ட கான், பாகிஸ்தானை தீவிரவாதம் என்று மேற்கத்திய நாடுகள் விமர்சிக்கின்றன.

Also Read: 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்கா அறிக்கை

ஆனால் இந்தியாவின் பாசிச கொள்கைகள் குறித்து யாரும் விமர்சிப்பதில்லை என குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் பற்றி குறிப்பிட்ட கான், ஆப்கனில் உள்ள மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா உதவ வேண்டும். இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ஈடுபடவில்லை என்றபோதும் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் அறியப்படாத காரணங்களுக்காக தாக்கப்பட்டதாக கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

Also Read: சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது..? பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அலினா சான் தகவல்..

அமெரிக்கா ஆப்கனில் என்ன இலக்குகளை அடைய விரிம்புகிறது என்று எனக்கு புரியவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கனை 20 வருடங்கள் ஆக்கிரமித்தனர். ஆப்கானிஸ்தான் குழப்பத்தில் முடிவடைந்தால் அதன் விளைவுகளை பாகிஸ்தான் எதிர் கொள்ள நேரிடும். ஏனெனில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் 2,600 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது என தனது மனகுமுறல்களை தெரிவித்துள்ளார் இம்ரான்கான்.

Also Read: மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு.. மே.வங்கத்தில் 20 வெடிகுண்டுடன் இராணுவ முகாமை நோக்கி சென்ற நபர் கைது..

Leave a Reply

Your email address will not be published.