நைஜீரியாவில் சீனர்களை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற நைஜீரிய கொள்ளையர்கள்..

நைஜீரியாவின் மத்திய மாநிலமான நைஜரில் மின்சார திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று சீனர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் தொழிலாளர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

செவ்வாய் அன்று நைஜரில் உள்ள ஒரு கிராமத்தில் சீன-ஹைட்ரோ திட்டத்தின் கீழ் டிரான்ஸ்மிஷன் லைன் டவரில் பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று சீனர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் தொழிலாளர்களை ஆயுத மேந்திய கொள்ளைகாரர்கள் கடத்தி சென்றுவிட்டனர். பின்னர் போலிசாருக்கும் கொள்ளைகாரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு சீனர் மற்றும் இரண்டு உள்ளூர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

அதே நேரத்தில் நான்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக நைஜர் காவல்துறை செய்தி தொடர்பாளர் வாசியு அபியோடூன் வியாழன் அன்று தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த கொள்ளைகாரர்கள் வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் சாதாரண குடிமக்களை கடத்தி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆனால் சமீபகாலமாக வெளிநாட்டினரை குறிவைத்து, குறிப்பாக சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்களை விடுவிக்க பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலை செய்துவிட்டு காடுகளுக்குள் சென்று மறைந்து விடுவார்கள். புதன்கிழமை அன்று நைஜீரிய அரசாங்கம் இரண்டு கொள்ளை கும்பலை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது.

Also Read: ஊழல், பாலியல் குற்றம் இரண்டும் இஸ்லாம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை: இம்ரான்கான்

இதனை அடுத்து சீன தூதுவர் குய் ஜியான்சுன், நைஜீரிய காவல்துறை தலைவர் உஸ்மான் அல்கலி பாபாவை சந்தித்து சீனர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும் கோரிக்கை விடுத்தார். மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து செயல்படுத்த நைஜீரிய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக குய் கூறினார்.

Also Read: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்..

தெற்கு நைஜர் பகுதி எண்ணெய் வளம் கொண்ட பகுதியாகும். அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி சென்று பயணகைதிகளாக வைத்து பணம் பறிப்பதை கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர். சுரங்கம், ரயில்வே, விமானநலையங்கள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட பெரிய திட்டங்களில் பணிபுரியும் சீன ஊழியர்கள்தான் இவர்களின் குறியாகும். கடந்த நவம்பர் மாதம் ஆப்ரிக்கா மற்றும் நைஜீரியாவில் அதிக ஆபத்து உள்ள பகுதிகளுக்கு பயணத்தை தவிர்க்குமாறு சீன அதிகாரிகள் தனது ஊழியர்களை கேட்டுக்கொண்டனர்.

Also Read: மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. மக்கள் போராட்டம்..

Leave a Reply

Your email address will not be published.