தமிழக மாவோயிஸ்ட் உட்பட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது NIA..
பயங்கரவாத செயல்களை திட்டமிட்டதற்காகவும், இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதற்காகவும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக மாவோயிஸ்ட் (CPI) அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பயங்கரவாத செயல்களை செய்வதற்கும் இந்திய அரசுக்கு எதிராக போரை நடத்துவதற்கும் கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் ஆயுத பயிற்சிகளை நடத்தியது தொடர்பாக NIA, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றத்தில் 20 மாவோயிஸ்ட் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட மாவோயிஸ்ட்களான, ராமநாதபுரத்தை சேர்ந்த காளிதாஸ், சிக்கமங்களூரை சேர்ந்த ஶ்ரீமதி, சாவித்ரி மற்றும் கிருஷ்ணமூர்த்தி, கோவையை சேர்ந்த டேனீஷ், சந்தோஷ்குமார் மற்றும் தினேஷ், உடுப்பியை சேர்ந்த விக்ரம் கவுடா, வயநாட்டை சேர்ந்த சோமன், பீஜாப்பூரை சேர்ந்த ஷர்மிளா, வேலூரை சேர்ந்த ராகவேந்திரன், திருவண்ணாமலையை சேர்ந்த திருவேங்கடம், திருச்சூரை சேர்ந்த ராஜன், பீஜாப்பூரை சேர்ந்த தீபக், தேனியை சேர்ந்த கார்த்திக், பெங்களூரை சேர்ந்த ரமேஷ், கண்ணுரை சேர்ந்த ராஜீவன், ராணிப்பேட்டையை சேர்ந்த ரமேஷ், விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அன்னேஷ் பாபு ஆகியோர் மீது ஆயுத சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட், மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவின் மண்டல குழு கூட்டத்தை நடத்தி தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும், ஆயுத பயிற்சியும், இந்திய அரசுக்கு எதிராக போர் நடத்தவும் திட்டம் தீட்டியதாக NIA செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
Also Read: ரஷ்ய ஹெலிகாப்டருடன் இஸ்ரேலிய NLOS ATGMs ஏவுகணையை இணைக்கும் இந்திய விமானப்படை..
இந்த வழக்கு முதலில் மலப்புரத்தில் உள்ள எடக்கரா காவல் நிலையத்தில் செப்டம்பர் 2017 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கேரளாவின் பயங்கரவாத எதிர்ப்பு படையால் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்டு 20, 2021 அன்று இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் நிலம்பூரில் உள்ள வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் மண்டல குழுவின் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். நினைவேந்தல் வாரத்தை அனுசரித்து மாவோயிஸ்ட் உருவான நாளை கொண்டாடியுள்ளதாக NIA அதிகாரி தெரிவித்துள்ளார்.
Also Read: இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்.. முதல் 3 இடத்திற்குள் இந்தியா..
மேலும் இந்த அமைப்புக்கு மக்களை திரட்டுதல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் பயங்கரவாத செயல்களை செய்ய குழுவினருக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதன் அடிப்படைவில் NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.