பங்களாதேஷ் பயங்கரவாதியை மேற்குவங்கத்தில் அதிரடியாக கைது செய்தது NIA..

மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அல்-கொய்தா, இந்தியன் முஜாகிதீன் மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பற்ற வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இதேபோல் கடந்த ஜூலை மாதமும் மேற்குவங்கத்தில் ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட பயங்கரவாதிக்கும் இந்த 4 பேருடன் தொடர்பு இருக்கலாம் என NIA தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தில் தங்களது கட்டமைப்பை உருவாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் டாக்காவில் உள்ள ஹோட்டலில் தாக்குதல் நடத்தியதில் வெளிநாட்டை சேர்ந்த 17 பேர் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

அந்த பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களின் பயங்கரவாத அமைப்பை மேற்குவங்கத்திலும் விரிவாக்க முயற்சி நடப்பதாக 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்து இருந்தனர்.

Also Read: ராய்பூர் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 6 CRPF வீரர்கள் காயம்..

கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் உள்ள காக்ரகர் என்ற இடத்தில் உள்ள மதராசாவில் குண்டு வெடிப்பு நடந்தது. அதற்கு காரணமான பங்களாதேஷை சேர்ந்த நபரை NIA கைது செய்தது. குண்டுவெடிப்பு வழக்கில் NIA நீதிமன்றம் பங்களாதேஷை சேர்ந்த பயங்கரவாதிக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தற்போது மேற்கு வங்கத்தில் பல பயங்கரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மேற்குவங்கத்கை சேர்ந்த ஒருவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பிடோக்கள்.. இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்..

Leave a Reply

Your email address will not be published.