புதிய தலைமுறை தேஜஸ் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைக்க திட்டம்..?

பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என இந்திய விமானப்படை தலைவர் ஏர் சீப் மார்ஷல் RKS பதாரியா கூறினார். மேலும் அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்திய விமானப்படைக்கு 350 போர் விமானங்கள் வாங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற இந்திய விண்வெளி துறை குறித்த மாநாட்டில் பேசிய பதாரியா, சீனாவின் சவால்களை சமாளிக்க நமது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்திய விமானப்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் வாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறையில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். சொந்த தொழிற்நுட்பம் நம்மிடம் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். ஒரே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் அளவிற்கு நம்முடைய விமானப்படை வலுபடுத்த வேண்டும் எனவும் பதாரியா தெரிவித்தார்.

நமது சொந்த தயாரிப்பான தேஜஸ் இலகுரக போர் விமானம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும், தேஜஸ் புதிய தலைமுறை விமானம் கொள்முதல் செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கன் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய விமானப்படை எதற்கும் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய நிலையில் காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளை மீட்பதற்கு கூட்டணி அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தற்போது தாலிபான்களிடம் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதால் அதனை கொண்டு காஷ்மீரில் தாக்குதல் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பார்க்கும் தொழிற்நுட்பமும் தற்போது அவர்களிடம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.