புதிய வகை கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
பிரிட்டனில் இருந்து பரவிய புதிய கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரிட்டனில் இருந்து புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இது பழைய கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பிரிட்டனில் இருந்து இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா வைரஸால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸின் மரபணு குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வகை கொரோனா வைரசின் மரபணுவை தனியாக பிரித்து எடுத்துள்ளனர். இதனை மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையை செய்துள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளி ஒருவரின் மாதிரிகளில் இருந்து இந்த புதிய வகை வைரசின் மரபணு பிரித்து எடுத்துருக்கிறார்கள்.
இதனால் இந்த புதிய கொரோனா வைரஸ் பற்றி மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.