நேபாள பார்லிமென்ட் கலைப்பு! பிரதமர் சர்மா ஒலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
நேபாள பார்லிமென்ட் கலைப்பு! பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..
நம் அண்டை நாடான நேபாளத்தில் 2018ல் சர்மா ஒலி தலைமையிலான ச் CPN-UML மற்றும் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தாஹால் பிரசந்தா தலைமையிலான சி.பி.என்., மாவோயிஸ்டு கட்சிகள் இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.
பிரதமராக சர்மா ஒலி பதவி ஏற்றார். கட்சியின் தலைவராக சர்மா ஒலியும், துணைத் தலைவராக பிரசாந்தாவும் பதவி வகித்து வந்தனர்.
இருப்பினும் அவர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. சர்மா ஒலியின் இந்திய எதிர்ப்பு மற்றும் சீன ஆதரவு நடவடிக்கைகளுக்கு பிரசாந்த் கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க அதிபர் பித்யாதேவி பண்டாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை ஏற்று பார்லிமென்டை உடனடியாக கலைத்து அதிபர் உத்தரவிட்டார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 10ல் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தன..
பார்லிமென்ட் கலைப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி ராணா, மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ராணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணை தொடங்கியது.
பார்லிமென்டை கலைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு சர்மா ஒலிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.