ஹைப்பர்சோனிக் ஏவுகணையை விரைவாக உருவாக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணையை உருவாக்கும் பணியில் ஈடுபடுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சீனா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ள நிலையில் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

DRDO ஏற்பாடு செய்த ‘எதிர்காலத்திற்கான தயாரிப்பு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் நேற்று உரையாற்றிய ராஜ்நாத்சிங், DRDO விஞ்ஞானிகளை பாராட்டினார். DRDO இப்போது எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி வருகிறது.

DRDO இப்போது ட்ரோன் எதிர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, பிக்-டேட்டா மற்றும் விண்வெளி போருக்கும் தயாராகி வருவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அதேபோல் விஞ்ஞானிகள் ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுமாறும் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் DRDO உருவாக்கிய எதிர் ட்ரோன் அமைப்பு மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்ட் ஆயுதத்தை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தார்.

இந்தியா நீண்ட காலமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பிரமோஸ் ஏவுகணை ஒன்றையும், இந்தியா தனியாக ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருவதாக அமெரிக்க பார்லிமென்ட் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஹைப்னர்சோனிக் என்பது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. தற்போது ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா இதனை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளன.

ரஷ்யா ஹப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிவிட்டது. சீனா சமீபத்தில் சோதனை செய்தது. அமெரிக்கா செய்த சோதனை தோல்வியில் முடிந்தாலும் கிட்டத்தட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி விட்டது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா ஸ்க்ராம்ஜெட் இஞ்சின் மூலம் இயங்கும் அதன் ஹைப்பர்சோனிக் தொழிற்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் வாகனத்தின் (HSTDV) மற்றொரு சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.

Also Read: பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

கடந்த ஆண்டு செப்டம்பரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட HSTDV, நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில் ஒரு முக்கிய தொகுதியாக செயல்படும். ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது ராக்கெட்டில் இருந்து ஏவப்படும் கிளைடு வாகனம் அல்லது ஸ்க்ராம்ஜெட் இஞ்சின் மூலம் இயங்கும் குருஸ் ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த HSTDV ஆனது ஹைப்பர்சோனிக் மற்றும் நீண்ட தூர குருஸ் ஏவுகணைகளுக்கான கேரியர் வாகனமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் SMART அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்ட் ஆயுதமானது (SAAW) எதிரி விமானநிலைய ரேடார்கள், பதுங்கு குழிகள், டாக்ஸி ட்ராக்குகள் மற்றும் ஓடுபாதைகளை குறிவைத்து 100 கிலோமீட்டர் வரை தாக்குதல் நடத்த முடியும். இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பானது எதிரி ட்ரோன்களை கண்டறியவும், தடுக்கவும், அழிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர் ட்ரோன் அமைப்பு 4 முதல் 6 கிலோமீட்டர் வரம்பை கொண்டுள்ளது.

Also Read: உலகின் முதல் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்த 3 இந்திய நிறுவனங்கள்..

Leave a Reply

Your email address will not be published.