இந்தியாவின் பார்வையில் பொம்மை பிரதமர்.. இம்ரான்கானை கடுமையாக விமார்சித்த நவாஸ் ஷெரிப்..

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இம்ரான்கானை விமர்சித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த இராணுவத்தால் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டதால் அவர் இந்தியாவில் பொம்மை பிரதமர் என அழைக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானில் இரண்டு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற 71 வயதான நவாஸ் ஷெரிப், இதய நோய் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியதை அடுத்து நவம்பர் 2019 முதல் அவர் லண்டனில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் டிசம்பர் 24 அன்று லாகூரில் நடைப்பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்ற நவாஸ் ஷெரிப், இம்ரான்கானை இந்தியாவில் பொம்மை பிரதமர் என அழைக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு மேயரை விட அவருக்கு குறைவான அதிகாரமே இருப்பதாக ஷெரிப் விமர்சித்துள்ளார். மேலும் இதற்கு காரணம் அவர் எப்படி ஆட்சிக்கு வந்தார் என்ற உண்மை உலக நாடுகளுக்கு தெரிந்து விட்டது. அவர் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வரவில்லை. மாறாக இராணுவத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளார் என ஷெரிப் விமர்சித்துள்ளார். இம்ரான்கான் அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த மூன்று வருடத்தில் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 34 பில்லியனுக்கும் அதிகமாக கடன் வாங்கி உள்ளார்.

புதிய பாகிஸ்தான் என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த இம்ரான்கான் போன்ற தகுதியற்ற மற்றும் திறமையற்றவர்கள் நாட்டின் மீது திணிக்கப்பட்டுள்ளனர். மக்களின் கருத்துக்கள் கூட அடகு வைக்கப்படுகின்றன, நாடு செழிப்பை நோக்கி செல்ல வேண்டுமானால் கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டை முன்னேற்ற மக்களுக்கு மீண்டும் வாக்குரிமையை வழங்க வேண்டும் என நவாஸ் தெரிவித்தார்.

Also Read: அர்ஜென்டினா உடனான JF-17 ஒப்பந்தத்தை இழக்க நேரிடும். இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் ட்வீட்..

இம்ரான்கான் சர்வதேச நாணய நிதியம் செல்வதை விட தற்கொலை செய்வதையே விரும்புவார். அவர் எப்போது தற்கொலை செய்து கொள்வார் என நாங்கள் இப்போது காத்துருக்கிறோம் என ஷெரிப் கூறினார். மேலும் 2018 ஆம் ஆண்டு இம்ரான்கானை ஆட்சியில் அமர்த்தியதற்காக ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் முன்னாள் ISI தலைவர் ஜெனரல் பைஸ் ஹமீத் ஆகியோரை கடுமையாக சாடினார்.

Also Read: பணத்திற்காகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்றோம். பொது நலனுக்காக அல்ல: இம்ரான்கான்

Leave a Reply

Your email address will not be published.