வரலாற்றில் முதன்முறையாக நாகாலாந்து சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

நாகாலாந்து மாநிலத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி மாதம் முதல் முறையாக தேசிய கீதம் சட்டமன்றத்திற்குள் இசைக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நாகாலாந்து மாநில சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.

பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கிய 13வது நாகாலாந்து சட்டமன்றத்தின் ஏழாவது கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. மாநில சட்டப்பேரவை, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தொடக்க உரைக்கு முன்னும் பின்னும் முதன்முறையாக தேசிய இசைக்கப்பட்டது.

தேசிய கீதத்தை இசைந்ததன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்கியிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் நாகாலாந்து மாநில பிரிவின் தலைவரும், நாகாலாந்து மாநில தலைவருமான டெம்ஜென் இம்னா அலாங் தெரிவித்தார்.

நாகாலாந்து சட்டசபையில் தெரியாத
காரணங்களுக்காக தேசிய கீதம் இசைப்பது ஒருபோதும் மரபில் இல்லை என சட்டசபை ஆணையர் மற்றும் செயலாளர் டாக்டர் PJ ஆண்டனி தெரிவித்தார். ஆனால், இந்த முறை ஆளுநர் உரையின் ஒரு பகுதியாக தேசிய கீதம் சேர்க்கப்பட்டபோது, இந்த நடவடிக்கை அனைத்து உறுப்பினர்களாலும் வரவேற்கப்பட்டது.

இதேபோல் திரிபுரா சட்டசபையிலும், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய கீதம் இசைப்பட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2018 மார்ச் 23-ல் திரிபுரா சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சஞ்சய் மிஸ்ரா கூறினார்.

திரிபுரா பாஜக செய்தித் தொடர்பாளர் நபந்து பட்டாச்சார்ஜி கூறுகையில், “இடதுசாரிக் கட்சிகள் நீண்ட காலமாக மாநிலத்தை ஆட்சி செய்து வந்தன. பின்பு பாஜக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *