உ.பியில் கோவிலுக்குள் இறைச்சி துண்டுகளை வீசிய மர்மநபர்கள்.. இறைச்சி கடைகளுக்கு தீ வைப்பு..

ஜூலை 16, சனிக்கிழமை அன்று, உத்திரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தின் தல்கிராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரசூலாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சிலர் இறைச்சி துண்டுகளை வீசியதால் கலவரம் வெடித்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தகவலின்படி, நேற்று ரசூலாபாத் கிராமத்தில் உள்ள இந்து கோவிலில் அதிகாலை இறைச்சி துண்டுகளை வீசியுள்ளார். காலையில் தினசரி பூஜை செய்ய பூசாரி ஜெகதிஷ் ஜாதவ் அதிகாலை 4 மணி அளவில் கோவிலுக்கு வந்தபோது, கோவிலுக்குள் இறைச்சி துண்டுகள் கிடப்பதை கண்டுள்ளார். கோவிலுக்குள் இறைச்சி துண்டுகள் கிடப்பதாக பூசாரி கிராம மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்ட அலுவலர் சிவபிரதாப் சிங் மற்றும் சப் கலெக்டர் சிப்ராமாவ் அசோக்குமார் ஆகியோர் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் இறைச்சி துண்டுகளை அகற்றி அதிகாரிகள் கோவிலை சுத்தம் செய்தனர். இருப்பினும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தல்கிராம்-இந்தர்கர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிராம் முழுவதும் பரவியதால் கொதிப்படைந்த யாரோ சிலர் கோவிலுக்கு அருகில் உள்ள 3 இறைச்சி கடைகளுக்கு தீ வைத்தனர். இதனை அடுத்து பதிலுக்கு கோவில் சிலையை சிலர் அவமதித்துள்ளனர். இதனை அடுத்து நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் கன்னோஜில் இருந்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன.

அனைத்து காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மாவட்ட நீதிபதி ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், அப்பகுதியில் போலிஸ் குழு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்குமார் ஶ்ரீவஸ்தவா, தல்கிராமிற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரசூலாபாத் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 இறைச்சி கடைகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் ஶ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.