ஆப்கானிஸ்தானில் தாலிபான் அதிகாரியை கொலை செய்த மர்ம நபர்கள்..

ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தில் அம்மாகாணத்தின் பொருளாதார பொறுப்பை கையாளும் தாலிபான் அதிகாரி அப்துல் ரஹ்மான் முனாவர் சனிக்கிழமை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

அப்துல் ரஹ்மான் முனாவர் படுகொலை செய்யப்பட்டதை அம்மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சாரத்தின் செயல் தலைவர் ஷம்சுல்லா முகமது உறுதி படுத்தி உள்ளார். பரியாப் மாகாணத்தின் பர்யாபின் கைசார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அப்துல் ரஹ்மான் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தாலிபான் அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்துல் ரஹ்மான் எதற்கான கொல்லப்பட்டார் என தெரியவில்லை. இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய குற்றவாளிககை தேடி வருகிறோம். விசாரனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜுன் மாதம், ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி, தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி நான்கு தாலிபான்களை கைது செய்தது. இந்த செய்தியை தேசிய எதிர்ப்பு முன்னணியின் செய்தி தொடர்பாளரும் தகவல் தொடர்பு இயக்குநருமான சிப்கதுல்லா அஹ்மதி உறுதி செய்தார்.

பின்னர் இரண்டு தாலிபான்களை தேசிய எதிர்ப்பு முன்னணி கொலை செய்தது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி தாலிபான் நிலைகள் மீது பயங்கரமான தாக்குதல்களை நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published.