முஸ்லிம் மாணவிகள் போராட்டம்.. வன்முறையை தூண்ட முயற்சித்த இருவர் ஆயுதங்களுடன் கைது..

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில் முஸ்லிம் மாணவிகள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறையை கட்டவிழ்த்துவிட சதி செய்த இருவரை உடுப்பி போலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கடுமையான சீருடை விதிகளை அமல்படுத்தியுள்ள அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு கல்லூரிக்கு வெயியே முஸ்லிம் மாணவிகள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறையை தூண்ட முயன்ற ஹாஜி அப்துல் மஜீத் கங்கோலி(32) மற்றும் ரஜப் கங்கோலி(41) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவிகள் கூட்டத்தில் 5 முதல் 6 பேர் வரை கத்தியை காட்டி மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களில் 2 பேரை கைது செய்த நிலையில் மற்றவர்களை போலிசார் தேடி வருகின்றனர். கலவரத்தை தூண்டிவிட்டு அதனை இந்துக்கள் மீது போட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அப்துல் மஜீத் ஒரு ரவுடி ஆவான். அப்துல் மீது கங்கோலி காவல்நிலையத்தில் 7 வழக்குகளும், ரஜப் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது குந்திபுராவில் நடந்த போராட்டத்தில் வன்முறையை தூண்ட முயன்றதாக குந்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: சீனா 38,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.. அமைச்சர் தகவல்..

கர்நாடகாவின் கொப்பா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் இந்து மாணவர்கள், வகுப்பறைக்குள் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து காவி துணி அணிந்து போராட்டம் நடத்தினர். அதேபோல் பாலகாடி கிராமத்தில் உள்ள அரசு நடத்தும் கல்லூரியில் ஹிஜாப் அனுமதித்தால் காவி துண்டும் அணிவோம் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read: பெங்களூரில் ரயில்வே நிலையத்தில் தொழுகை நடத்தும் அறை.. இந்து அமைப்புகள் எதிர்ப்பு..

முன்னதாக உடுப்பி மாவட்டத்தில் அரசு நடத்தும் பியு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்காக வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். வளாகத்திற்குள் மத உடைகளை அணியக்கூடாது என்றும், மாணவர்கள் சீரான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.