சீனாவும் பாகிஸ்தானும் நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது: இராணுவ தளபதி நரவனே

நாட்டின் பாதுகாப்பிற்கு சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருப்பதாக இராணுவ தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன துருப்புகள் திபெத் பீடபூமியில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆனால் கிழக்கு லடாக் பகுதியில் சீனா துருப்புகளை நிறுத்தி உள்ளதாகவும், சீனாவுடனான எல்லை பிரச்சனைக்கு அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது என கூறினார்.

அதே நேரத்தில் எல்லையில் எந்த ஒரு சவாலையும் சந்திக்க இந்திய இராணுவம் தயாராகவே இருப்பதாக முகுந்த் நரவனே தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதை இந்தியா கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சீனாவும் பாகிஸ்தானும் ராணுவம் மற்றும் பிற துறைகளில் கட்டமைப்பை அதிகரித்து வருகின்றன. சீனா மற்றும் பாகிஸ்தானால் ஒரே நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்ள இந்திய இராணுவம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என நரவனே தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *