அன்னை தெரேசா அறக்கட்டளையின் வங்கி கணக்கு முடக்கம்..? மதமாற்றம் காரணமா..? கொந்தளித்த மம்தா பானர்ஜி..

இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷினரிஸ் ஆப் சேரிட்டியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அமைச்சகம் இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷினரிஸ் ஆப் சேரிட்டியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கியது. அவர்களின் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.

சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது என திங்கள் கிழமை அன்று மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை சார்பில், மிஷினரிஸ் ஆப் சேரிட்டியின் FCRA (Foreign Contribution Regulation Act) புதுப்பித்தல் விண்ணப்பம் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் டிசம்பர் 25 அன்று நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

அன்னை தெராசா அறக்கட்டளை சார்பில், மிஷினரிஸ் ஆப் சேரிட்டியின் FCRA பதிவு ரத்து செய்யப்படவில்லை. மேலும் எங்களின் எந்த வங்கி கணக்குகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் முடக்க உத்தரவிடவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என கூறியுள்ளது.

மேலும் FCRA புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்ப்வ்டவில்லை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த தவறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை வங்கி கணக்குகளை பயன்படுத்த வேண்டாம் என எங்கள் மையங்களை கேட்டுக்கொண்டுள்ளதாக மிஷினரிஸ் ஆப் சேரிட்டி விளக்கம் அளித்துள்ளது.

மிஷினரிஸ் ஆப் சேரிட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் மதமாற்றம் மற்றும் குழந்தை விற்பனை வழக்கிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. டிசம்பர் 14 அன்று குஜராத்தில் செயல்பட்டு வரும் மிஷினரிஸ் ஆப் சேரிட்டியினால் நடத்தப்படும் அறக்கட்டளை ஒன்றில் இளம்பெண்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அறக்கட்டளை மீது FIR பதிவு செய்யப்பட்டது.

Also Read: லவ் ஜிகாத்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி கான்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

இந்த அறக்கட்டளை அங்கு தங்கி உள்ள இளம் பெண்களை கிறிஸ்துவ முறைபடி வழிபடவும், கிறிஸ்துவ நூல்களை படிக்கவும், கிறிஸ்துவ இளைஞர்களை திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும், வலுகட்டாயமாக இந்து பெண்களுக்கு அசைவ உணவு வழங்கப்படுவதாகவும் மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரி மயங்க் திரிவேதியின் புகாரின் அடிப்படையில் மகர்புரா காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டது.

Also Read: லட்சத்தீவில் மத அடிப்படையில் இருந்த அரசு விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை என மாற்றம்..?

2018 ஆண்டு ஜார்கண்டில் மிஷினரிஸ் ஆப் சேரிட்டியால் நடத்தப்படும் கர்ப்பிணி மற்றும் திருமணமாகாத தாய்மார்கள் தங்குமிடத்தில் இருந்து 3 குழந்தைகளை விற்பனை செய்ததாக கன்னியாஸ்திரிகள் கொன்சாலியா பால்சா மற்றும் அனிமா இந்த்வார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நான்காவதாக 2 மாத கைக்குழந்தையை 1.2 லட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு இருந்ததாக ஜார்கண்ட் போலிசார் தெரிவித்து இருந்தனர்.

Also Read: அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..

இதனை அடுத்து அப்போது மிஷினரிஸ் அஇப் சேரிட்டியால் நடத்தப்படும் அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. கன்னியாஸ்திரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள சபையும் மூடப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த மிஷினரிஸ் ஆப் சேரிட்டியின் தலைவர் பிரேமா, மிஷினரிஸ் ஆப் சேரிட்டி குழந்தை விற்பனையில் ஈடுபடுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார். இது அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கை, இதற்கு அறக்கட்டளை பொறுப்பேற்காது என கூறினார்.

Also Read: திருமண வயதை உயர்த்தும் முடிவு பெண்களுக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published.