உ.பியில் வாசனை திரவிய உரிமையாளர் வீட்டில் நடந்த IT ரெய்டில் 150 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல்..

உத்திர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியில் GST நுண்ணறிவு இயக்குனரகம் (DGGI) மற்றும் வருமான வரித்துறையினர் இணைந்து பான் மசாலா உற்பத்தியாளர், வாசனை திரவியம் உரிமையாளர் மற்றும் டிரான்ஸ்போர் செய்பவரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வாசனை திரவிய உரிமையாளரின் வீடுகளில் இருந்து 150 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான மும்பை, கன்னோஜ் மற்றும் குஜராத்தில் உள்ள பல நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பணத்தை எண்ணும் பணியில் SBI ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குஜராத் மற்றும் கான்பூர் பிரிவை சேர்ந்த DGGI இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். கான்பூரின் ட்ரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள பான் மசாலா வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் மூலப்பொருட்கள், முடிக்கப்பட்ட பொருட்களின் விலை பட்டியல், பில்கள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கான்பூரை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் இ-வே பில்கள் மூலம் இல்லாமல் போலி விலைப்பட்டியல் மூலம் சரக்குகளை கடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவிய நிறுவனத்தின் உரிமையாளரான பியூஷ் ஜெயினுக்கு பெட்ரோல் பம்புகள் உட்பட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவருக்கு துபாயிலும் 2 நிறுவனங்கள் உள்ளன.

Also Read: உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. பாஜக வாக்குகளை பிரிக்கும் சமாஜ்வாதி..

பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான மும்பை, குஜராத் மற்றும் கன்னோஜ் பகுதியில் உள்ள அலுவலக வளாகங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாசனை திரவிய உரிமையாளரான பியூஷ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமாஜ்வாதி வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.

Also Read: காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி MLA அதிதி சிங் மற்றும் சிக்ரி MLA பந்தனா சிங் பாஜகவில் இணைந்தனர்..

சமாஜ்வாதி கட்சி வாசனை திரவியத்தை அகிலேஷ் யாதவ் பல மூத்த தலைவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுக விழாவில் பியூஷ் ஜெயினும் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு உத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பணம் தேர்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பாஜகவில் இணைந்தார் மஞ்சிந்தர் சிங் சிர்சா.. அதிர்ச்சியில் சிரோமணி அகாலி தளம்..

Leave a Reply

Your email address will not be published.