நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை.. பெண்கள், பள்ளிக்குழந்தைகள் கடத்தல்..
நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தில் துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கெப்பி மாநிலத்தின் டான்கேட் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அப்பகுதியில் நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸ் மற்றும் இராணுவ படைகள் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருப்பினும் சனிக்கிழமை அதிகாலையில் இராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் கொள்ளைகாரர்கள், 2 இராணுவ வீரர்கள், ஒரு போலிஸ் அதிகாரி உட்பட 50 கிராமவாசிகளை சுட்டுக் கொன்றனர். கொள்ளையர்கள் தங்கடேவின் சமுக தலைவரையும், பல பெண்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளையும் கடத்தி சென்றுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு அருகில் உள்ள மாநிலமான சம்பாராவில் கொள்ளையர்கள் 200 பேரை கொன்ற நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடத்தப்பட்ட சமூக தலைவரின் மகன் டிட்ஸி உமர் புனு கூறுகையில். தாக்குதல் நடத்தியவர்கள் ஞாயிற்றுகிழமை அதிகாலை மீண்டும் வந்து வீடுகளை தீயீட்டு எரித்துள்ளனர்.
Also Read: ஹமாஸுக்கு எதிராக கொலையாளி டால்பின்கள் மூலம் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்..
தங்கடே கிராமம் இறந்த உடல்களால் சிதறி கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நைஜிரியாவில் டிசம்பர் 2020 முதல் ஆயுதம் ஏந்திய குழுக்களால் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் பணயகைதிகளாக கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தும் இந்த கும்பல் போகோ ஹராம் தக்பிரி குழு என கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: நைஜீரியாவில் சீனர்களை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற நைஜீரிய கொள்ளையர்கள்..
இது தவிர கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சீனர் மற்றும் இரண்டு உள்ளுர்வாசிகளை கடத்தி இந்த குழு கொன்றுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக இந்த பயங்கரவாத குழுவால் 30.000க்கும் அதிகமானோர் கடத்தி கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹராம் கிளர்சியாளர்களை ஒடுக்குவதற்கு ராணுவம் ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிகையை மேற்கொண்டுள்ளதாக அதிபர் முஹம்மது புஹாரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.