பாகிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 2,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல்..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 6 மாதங்களில் 2,439 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 90 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலானோர் கவுரவ கொலை செய்யப்படுவதாகவும் பஞ்சாப் தகவல் ஆணையம் வழங்கிய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCP) அறிக்கையின்படி, பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் (2015-21) 22,000 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு, கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
110 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில், கடந்த 6 மாதங்களில் 400 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், 2,300 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பழி சுமத்தப்படுவதாகவும், இதன் காரணமாக இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் மன உறுதி அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தண்டிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதால் குற்றங்கள் குறைவதற்கு பதிலாக இதுபோன்ற பாலியல் பலாத்காரம், கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் அதிகரித்து கொண்டே செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 1 சதவீதத்திற்கும் குறைவாகவே குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளன. 22,000 வழக்குகளில் 77 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தண்டனை சதவீதம் 0.3 மட்டுமே உள்ளன.
லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைகழகம் (LUMS) பேராசிரியர் நிடா கிர்மானி தனது அறிக்கையில், பாகிஸ்தானில் கற்பழிப்பு கலாச்சாரம் பிரதானமாக உள்ளது. இது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை குற்றம் சாட்டுகிறது. இது அனைத்து ஆண்களையும் இயற்கையாகவே வன்முறையாளர்களாக சித்தரிக்கிறது. பலர் இதனை மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் இது ஒரு கடினமான பணியாகும் என கூறியுள்ளார்.
கடந்த வாரம் லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் ஒரு நபர் தனது திருமணமான சகோதரியை சுட்டுக்கொன்றார். 5 குழந்தைகளுக்கு தாயான 28 வயதுடைய பாதிக்கப்பட்ட அந்த பெண், பணிப்பெண்ணாக ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சுற்றுப்புரத்தில் உள்ள 4 நபர்களால் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read: சிதறும் பாகிஸ்தான்.. இராணுவதின் மீது தாக்குதல் நடத்தும் பலூச் போராளி குழுக்கள்..
இதனை தனது குடும்ப கவுரவத்திற்கு அவமானமாக கருதிய அந்த பெண்ணின் சகோதரர் அந்த பெண்ணை கவுரவ கொலை செய்துள்ளார். உலகிலேயே அதிகமான கவுரவ கொலைகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சமூக ஊடக நட்சத்திரமான கந்தீல் பலோச், சமூக ஊடகங்களில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இதனார் ஆத்திரமடைந்த அவரது சகோதரர் பலோச்சை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மற்றொரு சமூக ஊடக நட்சத்திரமான கிம் கர்தாஷியன் என அழைக்கப்படும் 26 வயதான பலூச், ஒரு பாடலை உருவாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது சகோதரனால் பலூச் கவுரவ கொலை செய்யப்பட்டார். உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, பாலின சமத்துவத்தின் அடிப்படையில் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.
Also Read: பாகிஸ்தானில் பாதிரியார் சுட்டுகொலை.. நடவடிக்கை எடுக்க இம்ரான்கானுக்கு கோரிக்கை..
பாகிஸ்தானில் கற்பழிப்பு மட்டுமல்லாமல் திருமணமும் ஒரு தீவிர பிரச்சனையாக உள்ளது. அங்கு 21 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன்பும், 3 சதவீத பெண்கள் 15 வயதிற்கு முன்பும் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் 5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆரம்ப பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.