பண மோசடி வழக்கு: ராணா அயூபிற்கு ஐநா ஆதரவு.. பதிலடி கொடுத்த இந்தியா..

பத்திரிக்கையாளர் ராணா அயூப் பண மோசடி தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஐநா அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது இரண்டாம் உலக போருக்கு பின்னர் எதிர்காலத்தில் போர்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். இந்த ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் பல உறுப்பு நாடுகளிடம் இருந்து பல பில்லியன் டாலர்களை ஐநா பெறுகிறது.

தற்போது உலகின் முக்கிய பிரச்சனையாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே உள்ள பிரச்சனை ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் உள்ளதால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டத்தில் பதற்றம் உருவாகி வருகிறது. இந்த பதற்றத்தால் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேட்டோ அமைப்பும் உக்ரைன் எல்லையில் முகாமிட்டுள்ளதால் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஐநா அமைப்பு அதில் கவனம் செலுத்தாமல் பண மோசடி வழக்கில் சிக்கிய ராணா அயூப்புக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளது. ஐநா வெளியிட்டுள்ள பதிவில், பத்திரிக்கையாளர் அய்யூப்பிற்கு எதிரான இடைவிடாத பெண் வெறுப்பு மற்றும் மதவெறி ஆன்லைன் தாக்குதல்கள் இந்திய அதிகாரிகளால் உடனடியாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் அவருக்கு எதிரான நீதித்துறை துன்புறுத்தலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் ஐநா தெரிவித்துள்ளது. இதற்கு ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு தனது டிவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளது.

அதில் நீதித்துறை துன்புறுத்தல் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தேவையற்றவை. இந்தியா சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துகிறது. ஆனால் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்பது தெளிவாக உள்ளது. SRகள் புறநிலை மற்றும் துல்லியமாக தெரிவிக்கப்பட லேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தவறாக வழிநடத்தும் கதையை முன்னெடுப்பது ஐநா அமைப்பின் நற்பெயரை மட்டுமே கெடுக்கிறது என பதிலடி கொடுத்துள்ளது. பத்திரிக்கையாளர் ராணா அயூப் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரொனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக 2,69,44,680 கோடி ருபாயை திரட்டியுள்ளார்.

ஆனால் அந்த பணம் எதற்காக திரட்டப்பட்டதோ அதற்கு செலவு செய்யாமல் அந்த பணத்தை தனது தந்தை மற்றும் சகோதரி வங்கி கணக்கில் போட்டுள்ளார். பின்னர் தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கி அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். விகாஸ் சாங்க்தித்யாயன் என்ற நபர் உத்திரபிரதேச காவல்துறையில் ராணா மீது புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் ராணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1.77 கோடி ருபாயை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. இந்த நிலையில் தான் ஐநா ராணாவிற்கு ஆதரவாக பதிவு வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினர் ஐநாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ராணா தற்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.