2024ல் மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்: மேற்குவங்க முன்னாள் முதல்வரின் உறவினர் இரா பாசு..
நரேந்திர மோடி மீண்டும் 2024 ஆம் ஆண்டு பிரதமராக வருவார் என முன்னாள் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உறவினர் இரா பாசு தெரிவித்துள்ளார். ஓய்வூதிய தொகைக்காக விண்ணப்பித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக உழைத்து வருகிறார். அவர் ஒரு நேர்மையான மனிதர். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். ஒரு சிலர் அவருக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என பாசு தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 1990களில் இந்த மசோதாவை பலர் ஆதரித்தனர், ஆனால் இப்போது எதிர்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் ஒரு பிரிவினரால் தூண்டப்பட்டுள்ளது. இந்த விவசாய சட்டத்தினால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
மீரா பாசு 1976 ஆம் ஆண்டு கர்தாவில் உள்ள பிரயநாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வூதியம் அவருக்கு கிடைக்கவில்லை. பள்ளி சார்பில் இரா பாசு ஓய்வூதியம் பெற தேவையான கல்வி ஆவணங்களை சம்ர்பிக்க தவறியதால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என கூறினார்.
இருப்பினும் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையீட்டிற்கு பின் 14 ஆண்டுகளுக்கு பின் அவருக்கு ஓய்வூதியம் கிடைத்தது. இதற்காக அவர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ளார். வங்கத்திற்கு தொழில் நிறுவனங்கள் தேவை. டாடா வெளியேறியதில் எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது. டாடா இருந்திருந்தால் மாநிலத்தில் வேலை வாய்ப்பு பெருகிருக்கும்.
தொழில்மயமாக்கல் கொள்கைகளில் சரியான திட்டமிடல் தேவை என இரா பாசு தெரிவித்தார். இரா பாசு சமீபத்தில் பாராநகர் பகுதியில் உள்ள சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்டார். அவர் தற்போது வடக்கு 24 பர்கானாவில் உள்ள கர்தாவில் தங்கி உள்ளார். அவர் விரைவில் அவரது வீட்டிற்கு அனுப்பப்படுவார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read: ஏவுகணை தொழிற்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது: DRDO தலைவர் சதீஷ் ரெட்டி